என்னுடன் சற்று உட்காரு

முகப்பு ›› அற்புதங்கள் ›› என்னுடன் சற்று உட்காரு

“என்னுடன் சற்று உட்கார்ந்து, என் சத்தத்தைக் கேள்.”

இன்று, சிறிது நேரம் ஒதுக்கி, பரிசுத்த ஆவியானவரால் வந்தவை என்று நான் விசுவாசிக்கும் இந்த வார்த்தைகளை வாசிக்குமாறு உன்னை அழைக்கிறேன். இந்த வார்த்தைகளால் உன் ஆவியும் ஆத்துமாவும் பலப்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, ஒரு மகத்தான சமாதானமுள்ள இடத்திற்கு வரவேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

“சற்று மெதுவாக, என்னுடன் சற்று நேரம் உட்காரு. இன்று நீ செய்ய வேண்டிய இவை அனைத்துமே உன்னிடம் இருப்பதை நான் காண்கிறேன். ஆனால்… இங்கே, இப்போது, என்னிடம் சற்று நேரம் ஒதுக்கு.

என்னைப் பிரியப்படுத்துவதற்கும், என்னை நன்றாக அறிந்து கொள்வதற்குமான உன் விருப்பத்தை நான் பார்க்கிறேன். நீ என் சத்தத்தைக் கேட்க வேண்டும் என்றும், என்னை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிற இந்த தாகத்தையும் நான் அறிவேன்…

உன் எல்லாக் கேள்விகளுக்கும் என்னிடத்தில் பதில் உண்டு. ஆனால் சலசலப்புக்கு மத்தியில் நீ எப்படி என் சத்தத்தைக் கேட்க முடியும்? இந்த எல்லா சத்தங்களுக்கும் மத்தியில் எப்படிக் கேட்க முடியும்? உன் துரிதமான செயல்பாடுகளுக்கு மத்தியில் எப்படிக் கேட்க முடியும்?

சற்று மெதுவாக… வா.

ஒரு நிமிடம் நில்… வா.

கவலைகள் உன்னை நெருக்க விடாதே… வா.

உன் இருதயத்தில் பயத்தை ஊடுருவ விடாதே… வா.

பணத்தைப் பற்றிக் கவலைப்படாதே… வா.

நாளைய தினத்தைப் பற்றிப் பயப்படாதே… வா.

ஒரு நிமிடம் என்னுடன் உட்கார்ந்து என் சத்தத்தைக் கேள். நீ உன்னையே முன்னோக்கி உந்தி புதுப்பித்துக்கொள்.

என் ஜீவனைப் பெற்றுக்கொள். என் சமாதானத்தைப் பெற்றுக்கொள். என் மகிழ்ச்சியை வரவேற்றுக்கொள். என்னை வரவேற்றுக்கொள்… இதோ, நான் உனக்காக இருக்கிறேன்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!