எதிர்ப்பை சந்திப்பது அவ்வளவு எளிதல்ல!

முகப்பு ›› அற்புதங்கள் ›› எதிர்ப்பை சந்திப்பது அவ்வளவு எளிதல்ல!

இன்று, நான் எதிர்ப்பைப் பற்றி உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பாவம் இல்லாத ஒரே மனுஷனாகிய தேவ குமாரனாகிய இயேசுவே, எதிர்ப்பையும், புறக்கணிப்பையும், விமர்சனத்தையும், கூட்டத்தின் வெறுக்கும் கூக்குரலையும், துரோகத்தையும், மறுதலிப்பையும் சந்தித்திருப்பாரானால், நாமும் கூட இந்தச் சோதனைகளைச் சந்திப்பதில் ஆச்சரியமொன்றும் இல்லை!

எதிர்ப்பு மிகவும் ஆழமாகக் காயப்படுத்துகிறது, குறிப்பாக நம் அன்புக்குரியவர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் வரும் போது அது காயப்படுத்துகிறது. ஆனால் இதோ ஒரு நல்ல செய்தி… நம்மைக் கொன்றுபோடாதது நம்மை வலிமையாக்கும்!

இயேசு சொன்னார், “திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்.” (வேதாகமத்தில் யோவான் 16:33 ஐ வாசிக்கவும்)

என் நண்பரே, கப்பல் அசைந்தாலும் அவர் உன்னுடன் இருக்கிறார் என்பதில் உறுதியாக இரு. அவருடைய வார்த்தையால், புயல் நின்றுவிடும். அவரால் உன் மோசமான நாளைக் கூட உன் சிறந்த நாளாக மாற்ற முடியும்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!