ஊழியம் செய்யும்படி வந்த நமது ராஜா எல்லா தலைவர்களைக் காட்டிலும் மிகச்சிறந்தவர்.

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஊழியம் செய்யும்படி வந்த நமது ராஜா எல்லா தலைவர்களைக் காட்டிலும் மிகச்சிறந்தவர்.

“இயேசு தம் தோளின் மீது ஒரு துண்டை அணிந்து, தலைமைத்துவத்தில் உள்ள ஒருவர் எவ்வாறு மக்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை ஒரு எடுத்துக்காட்டாக செய்து காட்டினார்.” – பில் ஜான்சன்

இயேசு சில சமயங்களில் “ஊழியக்கார ராஜா” என்று அழைக்கப்படுகிறார். இது இந்த உலகத்திற்கும் அதன் சிந்தனை முறைகளுக்கும் முரண்பாடாகத் தோன்றலாம், ஆனால் இதில் ஒரு ஆவிக்குரிய உண்மை அடங்கியுள்ளது. இயேசு தம்முடைய சீஷர்களைப் பார்த்து, அவர்களுக்குள் எவன் ஒருவன் பெரியவனாக இருக்க விரும்புகிறானோ, அவன் அனைவருக்கும் ஊழியனாக இருக்க வேண்டும் என்று கூறினார்!

“… உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.” (மாற்கு 10:43)

இயேசுவின் தலைமைத்துவம் அவர் ஊழியம் செய்ய வந்தவர் என்பதன் அடிப்படையில் அமைந்திருந்தது.

“அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும்வந்தார்.” (மத்தேயு 20:28)

அவர் மனிதர்களிடத்தில் தமது தலைமைத்துவத்தை இரக்கத்துடன் செயல்படுத்திக் காட்டினார், மேலும் அவரது இருதயம் அவரது சீஷர்களை உயர்த்தி, அவர்களை அதிக வளர்ச்சிக்கு நேராகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.

இன்று, நீ மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதையும் கிறிஸ்துவின் சுபாவத்தைப் பிரதிபலிப்பதையும் தெரிந்துகொள்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!