ஊக்குவிப்பது என்பது நேசிப்பது

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஊக்குவிப்பது என்பது நேசிப்பது

இன்று, நீ மற்றவர்களை ஊக்குவிக்கும்படிக்கு… நான் உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன்!

ஊக்குவிக்கவும், உயர்த்தவும், ஆசீர்வதிக்கவும், ஆறுதலளிக்கவும் ஆண்டவர் உனக்குள் அதிகப்படியான ஆற்றலை வைத்துள்ளார். ஆண்டவர் தம்முடைய வார்த்தையால் அனைத்தையும் சிருஷ்டித்தார். உன் வாயில் வல்லமை இருக்கிறது… உன் வார்த்தைகளில் வல்லமை இருக்கிறது!

நீதிமொழிகள் 18:21ல் வேதாகமம் அறிவிக்கிறது,
“மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.”

உன் வாழ்க்கையிலும் உன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் நடக்கும் விஷயங்களை அறிவிக்க உனக்கு வல்லமையும் அதிகாரமும் உண்டு!

எவ்வளவு பெரிய பொறுப்பு இது – எப்படிப்பட்ட கனம் இது – ஆண்டவர் இதை உனக்குக் கொடுத்திருக்கிறார்!
ஊக்குவிப்பது என்பது நேசிப்பதாகும், கூட்டத்திற்கு எதிராகச் செல்லவும், கலாச்சாரத்திற்கு எதிராகவும், தற்போது நிலவும் மனநிலைக்கு எதிராகவும் செல்வதற்கான அதிக துணிச்சலைக் கொண்டிருக்கும்படிக்கு உன்னை ஊக்குவிக்கிறேன்.

இந்த உலகத்தைத் தலைகீழாக மாற்ற‌ வல்ல அன்பு எனும் சங்கிலியின் முதல் இணைப்புதான் நீ!

இன்றே மற்றவர்களை ஊக்கப்படுத்து…உன் வார்த்தைகளில் வல்லமை இருக்கிறது!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!