ஊக்கம் வல்லமை வாய்ந்தது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஊக்கம் வல்லமை வாய்ந்தது!

பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் அலுவலகத்தில், எங்கள் குழு உறுப்பினர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒரு குறிப்பு பலகையை வைத்திருந்தோம். அவர்களில் யாரேனும் ஒருவர் மூன்று தவறுகளைச் செய்துவிட்டால், அவர் / அவள் முழு அணிக்கும் திண்பண்டம் கொண்டு வர வேண்டும். அதுதான் “தண்டனை”!

ஒரு நாள், என் நண்பர், பாஸ்டர் பால் கௌலெட் அவர்கள் அலுவலகம் வழியாகக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, நாங்கள் தவறுகளை எழுதி வைத்திருந்த அந்தப் பலகையைக் கண்டுபிடித்தார். அவர் திகைத்துப்போனார்! குறிப்புப் பலகையில் “மோசமான மதிப்பை” வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அவர் பரிந்துரைத்தார், மேலும் அதற்குப் பதிலாக நேர்மறையாகச் செயல்பட எங்களை வலுவாக ஊக்குவித்தார்.

அந்த நாளிலிருந்து, ஒவ்வொரு முறையும் ஒரு குழு உறுப்பினர் பாராட்டத்தக்க ஒரு நல்ல விஷயத்தைச் செய்தால், நாங்கள் அவரது பெயரை கவுரவப்படுத்தி பலகையில் எழுதினோம்! ஒரு பெயர் மூன்று முறை எழுதப்பட்டால், அந்த நபரைப் பாராட்டும் வண்ணம் நாங்கள் ஒரு விருந்தை ஏற்பாடு செய்து, அவர் எங்களுக்கு எவ்வளவு மதிப்புமிக்கவர் மற்றும் பாராட்டுக்குரியவர் என்பதைக் காட்டுவோம்! இந்த மாற்றம் எங்கள் பணிச்சூழலை வேகமாக மாற்றியது, மேலும் எங்கள் உரையாடல்களில், “நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன்,” “நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்கள்” மற்றும் “எங்களுடன் இருப்பதற்கு நன்றி” போன்ற புதிய வார்த்தைகளைப் பேசத் தொடங்கினோம்.

பெரும்பாலும் நம் சமூகத்தின் மனநிலையானது, வேலை செய்யாதவற்றிற்கு நேராக நம் கண்களைத் திருப்புவதற்கு நம்மைத் தூண்டுகிறது. நமது வார்த்தைகளுக்கு ஆக்கப்பூர்வ வல்லமை உண்டு என்பதை மறந்துவிட்டு, நாம் சிறந்தவர்களாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் தோல்விகளை முன்னெடுத்து வைக்க விரும்புகிறோம். உண்மையில், வேதாகமம் இவ்வாறு அறிவிக்கிறது…

“மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.” (நீதிமொழிகள் 18:21)

தோல்வியுறுபவர்களை மேலே எழுப்பிவிடவும், வெற்றி பெறுபவர்களை மேலும் முன்னேற ஊக்குவிக்கவும் நாம் கற்றுக்கொள்வோமாக!

நமது நாடுகளின் மனநிலையை மாற்றும் திறன் நம்மிடம் உள்ளது. நாம் இந்த உலகத்திற்குள் ஒரு புதிய கலாச்சாரத்தைப் புகுத்த முடியும்… அதுவே தேவனின் ராஜ்யம், அதில் சகலமும் சாத்தியம், இங்கு ஒவ்வொரு நபரும் நேசிக்கப்படுகிறார்கள் மற்றும் மதிக்கப்படுகிறார்கள்!

நீ இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நபராக மாறப் போகிறாய் என்று நம்புகிறேன். ஆண்டவர் உன் வாழ்க்கையை அசாதாரணமான முறையில் பயன்படுத்துவார் என்று நான் நம்புகிறேன்… அதுவே உனக்கான எனது ஜெபம்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை ‘வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்’ என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது – மேலும் பல முறை அந்தந்த நாளுக்கான செய்தி எனக்குத் தேவையான ஒன்றாக இருந்து வருகிறது- நானும் இந்த செய்திகளை எனக்கு அன்பானவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்போது – இந்த ஊக்கத்தைப் பெறுவது உண்மையிலேயே மிகவும் ஆசீர்வாதம். உங்களின் ஊழியத்திற்கு நன்றி. உங்கள் உண்மையான ஊழியத்தின் நிமித்தம் ஆண்டவர் உங்களைத் தொடர்ந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்!” (அன்னாள்)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!