ஊக்கத்தின் ஊற்றாக மாறு
முகப்பு ›› அற்புதங்கள் ››
“நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது. அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம். தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?” (வேதாகமத்தில் யாக்கோபு 3:8-11ஐப் பார்க்கவும்)
நீ தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய், அவருடைய மகிமைக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறாய்… இந்தப் பூமியில் மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புதமான ஆற்றலை உன் வாழ்க்கை கொண்டிருக்கிறது. அப்படியானால் ஒரு வித்தியாசத்தை எப்படி நீ உருவாக்க முடியும்? வித்தியாசத்தை உருவாக்க ஆண்டவர் பேசுவதுபோல் பேசுவதுதான் ஒரே வழி!
நீ எங்கு வேலை செய்கிறாய் என்பதோ, உன் குடும்ப சூழ்நிலை எப்படிப்பட்டது என்பதோ, மற்றவர்கள் உன்னைப் பார்க்கும் விதம் எப்படிப்பட்டது என்பதோ ஒரு பொருட்டல்ல, நீ ஜீவனுள்ள தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய். உன் வாழ்க்கை அவருடைய கிருபைக்கும் அன்பிற்கும் சாட்சியாய் இருக்கிறது!
இன்று நான் உனக்குச் சவால் விடுகிறேன்… ஆண்டவர் பேசுவதுபோல் பேசு. அவதூறான வார்த்தைகளையோ அல்லது கெட்ட வார்த்தைகளையோ பேசுவதைத் தவிர்த்துவிடு. உன் வாய் குறைகூறுவதை நீ அனுமதிக்காதே. உன் இருதயத்தின் கதவு அதற்கு இறுக்கமாக மூடியிருக்கட்டும். அவதூறு என்பது உனக்குள் வரவேற்கப்படக் கூடாது.
நீ ஆண்டவருக்காகப் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறாய். உன் வாய் அவருக்காகப் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. அவர் மிகவும் மகத்துவமானவர்… அவரைத் துதி, அவரை ஆராதி! மற்றவர்களை நேசிப்பதன் மூலமும், அவர்களை ஆசீர்வதிப்பதன் மூலமும், உன் வாயை ஊக்கமளிக்கும் வல்லமை வாய்ந்த கருவியாகப் பயன்படுத்துவதன் மூலமும் அவரை நேசி.