உள்ளான மனுஷனில் புதுப்பிக்கப்படு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உள்ளான மனுஷனில் புதுப்பிக்கப்படு!

“டுரிட்டோப்சிஸ் நியூட்ரிகுலா”… என்ற இந்தப் பெயரைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாமல் இருக்கலாம், நீ இதைப் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டிருக்க மாட்டாய், ஆனால் இது ஒரு வகை ஜெல்லிமீன்களின் பெயராகும், அது தன் வயதான தன்மையை வாலவயதாகத் திருப்பிக்கொள்ளும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளது! இது ஒரு பட்டாம்பூச்சியானது மீண்டும் கம்பளிப்பூச்சியாக மாறுவதைப் போன்றது. ஒருபோதும் மரணத்தைக் காணாத இந்தச் சிறிய ஜெல்லிமீன், நமது புதிய பிறப்பு மற்றும் தேவனுடனான வாழ்க்கையின் யதார்த்தத்தை அழகாக விளக்குகிறது.

“அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. (வேதாகமத்தில் எபேசியர் 4:22-24ஐப் பார்க்கவும்)

அப்படியானால், உன் சரீரம் மட்டுமே காலத்தினால் மாறின வயதான தோற்றத்தின் அடையாளத்தைப் பெற்றிருக்கிறது… உன் ஆவியோ அந்த அடையாளத்தைக் கொண்டிருக்கவில்லை. அதிலும் இப்போது, ​​நீ மறுபடியும் பிறந்து தேவனுடைய பிள்ளையாக மாறிவிட்டதால், அந்த அடையாளம் உன்னில் துளியளவும் இல்லை! உன் இருதயம், உன் ஆத்துமா மற்றும் உன் எண்ணங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

உன் புதிய சுபாவத்தை உருவாக்கும் அனைத்தும் காலம் செல்லச் செல்ல மட்டுமே வளரும், அது வளரும்படிக்கு நீ பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்…

  • எல்லாவற்றிலும் தேவனுக்கு முதலிடம் கொடு,
  • அவருடைய வார்த்தையை தினமும் வாசித்து, அதற்குக் கீழ்ப்படி,
  • அவரிடம் பேசு மற்றும் அவரோடு கூட நேரத்தை செலவிடு,
  • உனக்கு கடினமாக இருந்தாலும் அவருடைய சித்தத்தை செய்வதையும் அவருடைய ஆவி விரும்புவதைச் செய்வதையுமே தேர்ந்தெடு.

இது ஒரு தொடர்ச்சியான ஓட்டமும், அவருடைய ஜீவனுக்கும் உனக்கும் இடையேயான நிரந்தரமான ஒரு பரிமாற்றமுமாகும். உன் எண்ணங்கள் புதுப்பிக்கப்படுகின்றன, அவருடைய ஜீவன் உனக்குள் பெருகுகிறது!

சாட்சி: “தேவன் என் முழு வாழ்க்கையையும், என் இருதயத்தையும், நான் சிந்திக்கும் விதத்தையும், என்னைச் சுற்றியிருக்கும் ஜனங்களையும், வாழ்வைப் பற்றிய எனது கண்ணோட்டத்தையும் மாற்றினார். அவர் எனக்கு ஒரு புத்தம் புதிய இதயத்தைக் கொடுத்து, அதில் அன்பு, சமாதானம், மகிழ்ச்சி, நற்குணம், நேர்மை, மனநிறைவு ஆகிய அனைத்தையும் வைத்துவிட்டார். முன்னர் நான் ஒரு கொள்ளைக்கார கும்பலில் உறுப்பினராய் இருந்தேன், நான் வெறுக்கத்தக்க மனுஷனாக இருந்தேன், ஆனால் நான் இனிமேல் அதே பழைய நபராக இருக்கப்போவதில்லை. எல்லா மகிமையும் தேவன் ஒருவருக்கே உண்டாவதாக, நான் இப்போது சுவிசேஷப் பாடல்களை எழுதுகிறேன்…. சகோதர சகோதரிகளை நான் நேசிக்கிறேன். ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற தினசரி தியானத்திற்காக நன்றி.” (சாமுவேல்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!