“உலகத்தை மாற்றுவது” எங்கிருந்து தொடங்குகிறது?

முகப்பு ›› அற்புதங்கள் ›› “உலகத்தை மாற்றுவது” எங்கிருந்து தொடங்குகிறது?

உலகில் நிறைய போர்கள் நடைபெறுகின்றன, நம் நாட்டில் மாற வேண்டிய பல விஷயங்கள் உள்ளன, நம்மைச் சுற்றி பல துன்பங்கள் நேரிடுகின்றன… நமக்கு விசேஷித்த வல்லமை (super power) இருந்தால், இதையெல்லாம் மாற்றிவிடுவோம், இல்லையா?

நமது சாதகமற்ற சூழ்நிலைகளை, சிறந்ததும், அமைதியானதும், சரியானதுமான சூழ்நிலைகளாக நாம் மாற்றலாம்! ஆனால் உலகத்தை எப்படி மாற்ற முடியும்? – சில சமயங்களில் ஒரு பிரம்மாண்டமான எறும்புப் புற்றின் நடுவில் உள்ள ஒரு சிறிய எறும்புபோல இருப்பதாக உணர்கிற நான் – இதையெல்லாம் மாற்ற என்ன செய்ய முடியும்?

உலகை மாற்றுவதற்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் உள்ளான மனதில் மறுரூபமடைவதுதான்! ரோமர் 12:2ல் வேதாகமம் நமக்குக் கூறுகிறபடி மறுருபமடைதல்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

உண்மையில், ரிக் வாரன் சொல்கிறார்: “மாற்றப்பட்டவர்களால் மட்டுமே உலகை மாற்ற முடியும்.”

வேதம் காட்டுகிறபடி, இதுவே மனிதகுலத்திற்கான ஆண்டவருடைய திட்டம்:

  • மோசே தனது ஜனங்களை விடுவிப்பதற்கு முன்பு ஆண்டவருடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பைக் கொண்டிருந்தார், அது அவரை வெகுவாக மாற்றியது. (யாத்திராகமம் 3:2)
  • மீதியானியர்களிடமிருந்து இஸ்ரவேலரை விடுவிப்பதற்கான சவாலை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு கிதியோன் தன்னையும் ஆண்டவரையும் பற்றிய பார்வையை மாற்ற வேண்டியிருந்தது. (நியாயாதிபதிகள் 6ம் அதிகாரம்)
  • பவுல் நடுங்கித் திகைத்து, பார்வையை இழக்கும் அளவிற்கான ஒரு சந்திப்பை தனது இரட்சகருடன் பெற்ற பிறகு, நமக்குத் தெரிந்தபடி, அதிக வாஞ்சையுள்ள சுவிசேஷகராக மாறினார், அப்படித்தானே? (அப்போஸ்தலர் 9ம் அதிகாரம்)

ஆண்டவர் உன்னையும் மாற்றட்டும்! அவர் ஒரு நேரத்தில் ஒரு நபரை மாற்றுவதன் மூலம் உலகை மாற்ற சித்தமாயிருக்கிறார்.

அது உன்னிலிருந்தும் என்னிலிருந்தும் துவங்குகிறது. இன்று, இந்த வசனத்தைத் தியானிக்க நான் உன்னை அழைக்கிறேன்: “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.” (2 கொரிந்தியர் 3:18)

ஆம், ஆண்டவர் உன்னைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்ற விரும்புகிறார்… அதை உன் மூலம் செய்ய விரும்புகிறார்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எரிக் அவர்களே, ஆண்டவர் பல சந்தர்ப்பங்களில் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மூலம் அவருடைய மகத்துவத்தைப் பற்றி எனக்குச் சொல்லி, ஆறுதல் அளித்து தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தியிருக்கிறார், மேலும் அவருடன் சரியான நல்லிணக்கத்துடன் இருக்க முடியாதபடி எனக்கு இருக்கிற பலவீனங்கள் மற்றும் கவலைகளைப் புரிந்துகொள்கிறார். சில சமயங்களில், நீங்கள் எனக்கு அனுப்புகிற செய்திகள் மிகவும் தனிப்பட்ட விதத்தில் இருந்திருக்கின்றன. உங்கள் மூலம் செயல்படும் பரிசுத்த ஆவியானவர்தான் அதைச் செய்தார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களது சிறப்பான பணிக்கு நன்றி. நீங்கள் எப்போதும் மற்றவர்களை ஆசீர்வதிப்பதுபோல் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக! அன்புடன் எழுதும், மரியா.” (மரியா, தூத்துக்குடி)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!