உன் வாழ்வில் புத்துணர்ச்சியூட்டும் காலங்கள் வருகின்றன!
முகப்பு ›› அற்புதங்கள் ››
சங்கீதம் 1ல், தேவன் நம்மை, ஓடும் நதிகளின் ஓரத்தில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பிடுகிறார்.
“அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” (சங்கீதம் 1:3)
இந்த ஆற்றின் தண்ணீர்கள், நம் வாழ்வில் பாய்ந்து, நமக்குப் புத்துணர்ச்சியளிக்கும் தெய்வீக நதியாய் இருக்கிறது!
ஒருவேளை இன்று நீ சோர்வாகவும், வறண்டு போனதாகவும், உயிரற்றதாகவும், வெறுமையாகவும் உணர்வாயானால்… நான் உனக்கு ஒரு காரியத்தை அறிவிக்கிறேன்: உன் வாழ்வில் நீ புத்துணர்ச்சி பெறும் காலங்கள் கர்த்தரிடமிருந்து ஊற்றுத் தண்ணீரைப்போல வருகின்றன!
தேவனுடைய சிங்காசனத்திலிருந்து ஜீவத்தண்ணீரின் ஜீவநதி புறப்பட்டு வருவதைப் பற்றி வேதாகமம் வெளிப்படுத்துகிறது (வெளிப்படுத்துதல் 22:1). அந்த நதிதான் பரிசுத்த ஆவியானவர்; அவரே உன் வாழ்வில் கிரியை செய்யவும், உன் மூலமாக உன்னைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்வில் கிரியை செய்யவும் விரும்புகிறார்.
இந்நாட்களில், நீ மீண்டும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அவருடைய ஜீவனுள்ள, ஆசீர்வதிக்கப்பட்ட, புத்துணர்ச்சியூட்டும் தண்ணீரால் நிரப்பப்பட்டு, ஆற்றோரம் வளரும், இலையுதிராத மரத்தைப்போல் கனி தந்து, எல்லாவற்றிலும் நீ செழித்தோங்க வேண்டுமென்பதே என் ஜெபம்!
ஆண்டவர் அருளும் ஜீவ வாழ்வை இன்றைக்கே நீ பெற்றுக்கொள்!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலை தினமும் காலையில் வாசிப்பது எனக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. சிறந்த அப்பாவாகவும் கணவராகவும் இருக்க எனக்கு உதவுகிறது.” (ஸ்டீபன்)