உன் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையை மாற்றும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையை மாற்றும்!

“கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். … அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ … உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்” (வேதாகமத்தில் நியாயாதிபதிகள் 6:12-16 ஐப் பார்க்கவும்)

இந்த வார்த்தையை இன்று பெற்றுக்கொள்: ஆண்டவர் உன்னை அழைக்கிறார், ஆண்டவர் உன்னை அனுப்புகிறார், ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.

நீ மிகச்சரியான நபராக இருக்க வேண்டியதில்லை. உண்மையுள்ள ஒருவராய் மட்டும் இரு, ஏனென்றால் மனுஷன் தேர்ந்தெடுப்பதுபோல் ஆண்டவர் தேர்ந்தெடுப்பதில்லை.

நீ எங்கிருந்து வந்தாய் என்பதோ அல்லது நீ என்ன செய்துகொண்டிருந்தாய் என்பதோ ஒரு பொருட்டல்ல, தேவனுடைய தெரிந்துகொள்ளுதல் உன் மீது அமர்ந்திருக்கிறது, அவருடைய சித்தத்தை நிறைவேற்ற உனக்கு உதவும்படியாக அவருடைய கரம் உன்னுடனே கூட இருக்கிறது.

உன் வாழ்க்கையின் நிகழ்வுகளும் சூழ்நிலைகளும் உனக்கும் உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நம்பிக்கை நிறைந்த எதிர்காலத்திற்கான உத்வேகமாக இருக்கிறது!

கிறிஸ்துவின் அன்பையும் ஒளியையும் உன்னில் சுமந்து செல்வதால், உன் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையை மாற்றும்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!