உன் வாழ்க்கை மதிப்புமிக்கது

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் வாழ்க்கை மதிப்புமிக்கது

“நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.” (வேதாகமத்தில் சங்கீதம் 139:15-16ஐப் பார்க்கவும்)

ஒரு நபரின் வாழ்க்கையை மதிப்பிடுவதற்கு எத்தகைய அளவுகோல்களைப் பயன்படுத்த வேண்டும்? ஒருவர் முக்கியமானவர் என்றும், மற்றவர் முக்கியமில்லாத நபர் என்றும் நாம் எதை வைத்துச் சொல்லுவோம்? உலகம் அதன் சொந்த அளவுகோல்களை நிலைநாட்டியுள்ளது… அதாவது, படிப்பு, சமூக அந்தஸ்து மற்றும் அவர்களது வெற்றி போன்றவற்றை வைத்து ஒரு நபரின் முக்கியத்துவத்தைக் கணக்கிடுகிறது.

ஆண்டவர் உன் வாழ்க்கையின் சிருஷ்டிகராய் இருக்கிறார். உன்னை உருவாக்கவும் உன்னை நேசிக்கவும் அவர் தெரிந்துகொண்டார். ஆகவே, நீ ஏதோ தீடீரென உருவாகிவிடவில்லை! உன் வாழ்க்கை மதிப்புமிக்கது, ஏனென்றால், அது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும்!

பிரபஞ்சத்தை உருவாக்கியவரே உன் வாழ்க்கை மதிப்புள்ளது என்று அறிவிப்பாரானால், வேறு யாரால் அதை மறுக்க முடியும்? நீ இல்லாத உலகம் மிகவும் நன்றாக இருக்கும் என்று சொல்லும் அந்தப் பொய்யான குரலைக் கேட்காதே… அது பொய் சொல்லுகிறது!

நீ உன் குடும்பத்தினர், உன் நண்பர்கள் மற்றும் உன் சக ஊழியர்களுக்கு ஒரு ஆசீர்வாதமான நபராய் இருக்கிறாய். அவர்களின் வாழ்விலும் இருதயங்களிலும் கர்த்தர் செயல்பட விரும்பும் வாய்க்காலாய் நீ இருக்கிறாய்!

நீ தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு நபராய் இருக்கிறாய், உன் வாழ்க்கை மதிப்புமிக்கது.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!