உன் வாழ்க்கையின் மீது யாருக்கு (உண்மையான) அதிகாரம் உண்டு?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் வாழ்க்கையின் மீது யாருக்கு (உண்மையான) அதிகாரம் உண்டு?

“எல்லா பொறுப்பும் என் தோள்களின் மேல் இருக்கிறது.” என்ற நிலைமையை விட பாரமான ஒரு நிலைமை உண்டோ? “என் பிள்ளைகள் சாதிப்பது என் கையில் தான் உள்ளது. வீட்டை எப்பொழுதும் சுத்தமாகவும் சீராகவும் வைத்திருப்பது என் பொறுப்பில் உள்ளது. என் கணவரை/மனைவியை மாற்றுவது என்னுடைய பொறுப்பு. என் பொறுப்பு… என் பொறுப்பு… என் பொறுப்பு!”

விருப்பத்திற்கு மாறாக, சில நேரங்களில் நாம் இப்படித்தான் வாழ்கிறோம், இல்லையா? பிரச்சனை என்னவென்றால், இப்படியாக நாம் விஷயங்களைப் பார்க்கும்போது, ஆண்டவருக்கு அங்கே இடமிருக்காது. ஆண்டவரைப் பொறுப்பேற்க விடாமல், “நான் பொறுப்பில் இருக்கிறேன்” என்று நாம் சிந்திக்கத் தொடங்கும் போது, மன அழுத்தம் நம் வாழ்வில் நுழைகிறது.

ஆண்டவர் நல்லவர், நம்முடைய முழு நம்பிக்கையையும் அவர் மீது வைக்க வேண்டுமென்று விரும்புகிறார். அவருடைய பராமரிப்பில் நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுத்து, அவருடைய இளைப்பாறுதலுக்குள் நாம் நுழைய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

நாம் முழுமையாக விசுவாசித்து, “ஆண்டவரே, நான் உம்மை நம்புகிறேன்!” என்று கூறும்போது, கவலை மறைந்துவிடும். வேதாகமம் கூறுகிறது, “கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.” (சங்கீதம் 37:3) அவ்வளவுதான். சுலபமானது.

நாம் அனுதினமும் ஆண்டவரை நம்புவதற்கு தேர்ந்துகொள்ளும்போது, அவர் நம் வாழ்வில் அவருடைய ஆசீர்வாதத்தை கொண்டு வந்து நம் தேவைகளை நிறைவேற்றுகிறார். எனவே நான் உன்னிடம் கேட்க விரும்புகிறேன்: உன் வாழ்க்கை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? உன் எதிர்காலத்தைத் திட்டமிட நீ யாரை நம்புகிறாய்?

மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கான கதவை மூடு, உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நுட்பத்தையும் ஆண்டவரிடம் விட்டுக்கொடு. அவருடன் உன் வாழ்நாள் முழுவதையும் எப்படி வழிநடத்துவது என்பது அவருக்குத் தெரியும். நீ சக்கரத்தின் கட்டுப்பாட்டை விட்டுவிட்டு அதை ஆண்டவரிடம் ஒப்படைக்கலாம்… அவர் உன்னை உன் இலக்குக்கு அழைத்துச் செல்வார்!

ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!