உன் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது!

நீ ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு, ஒரு சரித்திரம் படைக்கும்படியாக…. இந்தச் சரியான காலகட்டத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறாய்!

இந்த உலகத்தைத் தொடும்படியாகவும் அதன் சாம்பலில் இருந்து அதை மேலே தூக்கிவிடும்படியாகவும், மண்ணிலிருந்து வெளியே இழுத்துவிடும்படியாகவும், ஆண்டவர் தம்முடைய பிள்ளையாகிய உன்னைப் பயன்படுத்த விரும்புகிறார், என்று நான் நம்புகிறேன். அவர் உன்னைச் சுற்றியுள்ளவர்களுடைய “உலர்ந்த எலும்புகளுக்குள்” ஜீவ சுவாசத்தை ஊத விரும்புகிறார், அதை நிறைவேற்ற அவர் உன்னைப் பயன்படுத்த விரும்புகிறார்!

மௌனமாகப் பாடுபட்டுக்கொண்டிருப்பவர்களாகிய சக ஊழியரைச் சூழ்ந்திருக்கும் பிதாவின் அன்பின் கரங்கள்தான் நீ. இயேசுவை இன்னும் அறியாத ஒரு நண்பரை உயர்த்தும் கர்த்தருடைய வார்த்தைகள்தான் நீ. மறைவில் சிந்தும் கண்ணீரைத் துடைக்கவும், அழுபவர்களுடன் அழவும், தொடர்ந்து முன்னேற அவர்களை ஊக்குவிக்கவும் ஆண்டவர் அனுப்பும் ஒருவர்தான் நீ.

ஊக்குவிப்பு தேவையில்லை என்று ஒருவரும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. ஏதேனும் ஒரு சமயத்தில், நாம் அனைவரும் உபத்திரவங்கள், வியாதி, துன்பம், துரோகம், நிராகரிப்பு போன்றவற்றின் வழியாகக் கடந்து செல்கிறோம்…

நீ எங்கு சென்றாலும் ஆண்டவர் உனக்குத் துணையாக வருவார். நீ எங்கிருந்தாலும் அவருடைய பிரசன்னம், அவரது அபிஷேகம் மற்றும் அவரது சுகமளிக்கும் வல்லமை உன்னுடனே இருக்கின்றன! இது உன்னையோ அல்லது “செய்வதற்கான” உன் திறமையையோ பொறுத்தது அல்ல… உன்னில் உள்ள அவருடைய ஆவியைப் பொறுத்தாய் இருக்கிறது.

நீ முற்றிலும் விசேஷித்தவன்/விசேஷித்தவள், மேலும் இந்த உலகத்திற்கு ஆண்டவருடைய அன்பைக் குறித்து சாட்சியளிக்கும் உன் வாழ்வும் விசேஷித்தது. எனவே பின்வாங்காதே… அன்புகூரு, அன்புகூரு, அன்புகூரு!

என்னுடன் சேர்ந்து ஜெபி…“பிதாவே, என் வாழ்க்கைக்கென்று ஒரு நோக்கத்தை நீர் வைத்திருப்பதற்காக நன்றி! இன்று மற்றவர்கள் தங்கள் வாழ்க்கைக்கான நோக்கத்தைக் கண்டறிய இது உதவ வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். உமது அன்பினால் இந்த உலகத்தை மாற்ற என்னைப் பயன்படுத்துவீராக. இயேசுவின் நாமத்தில், ஆமென்!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!