உன் வாசனை என்ன?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் வாசனை என்ன?

நீ எப்போதாவது இளஞ்சிவப்பு பூவைப் பார்த்திருக்கிறாயா? இது “பட்டாம்பூச்சி புதர்” என்றும் அழைக்கப்படுகிறது. பல பூச்சிகளை, குறிப்பாக பட்டாம்பூச்சிகளை ஈர்க்கக்கூடிய அளவில், அதிக வாசனையுடன் தேனை அதன் நீண்ட பூக்கள் வெளியிடுவதால் இந்த புனைப்பெயரில் அது அழைக்கப்படுகிறது. இளஞ்சிவப்பு பூ பூக்கும்போது, ​​அதன் வாசனை திரவியம் பரவி, வண்ணத்துப்பூச்சிகளைத் தன்பக்கம் ஈர்க்கிறது, அவை முழு புதரையும் அவற்றின் அற்புதமான இறக்கைகளால் மூடுகின்றன.
உன் வாசனை என்ன?

“ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.” (வேதாகமத்தில் எபேசியர் 5:1-2ஐப் பார்க்கவும்)

பரலோக ராஜ்யத்தின் ஸ்தானாதிபதியாக, நீ வெளியிடும் சுகந்த வாசனையானது சமாதானமும் அன்பும் நிறைந்த வாசனையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். முன்பு ஒருபோதும் இல்லாத அளவிற்கு, நீ மாற்றத்தை உருவாக்குகிறாய், இந்த உலகில் நீதான் வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறாய்! கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம், நீ செல்லும் இடத்திலெல்லாம் பரலோகத்தின் சுகந்த வாசனையைப் பரப்புகிறாய்.

பிறகு, பட்டாம்பூச்சி புதரைப்போல, நீ மற்றவர்களை ஈர்க்கிறாய்… உன்னிடத்திற்கு அல்ல, மாறாக கிறிஸ்துவினிடத்திற்கு ஈர்க்கிறாய்! நீ வெளிப்படுத்தும் அன்பினாலும், தேவனுடைய பிரசன்னத்தின் சுகந்த வாசனையாலும் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.

நான் இன்று உனக்கு சவால்விடுத்து, உற்சாகப்படுத்த விரும்புகிறேன்… கிறிஸ்துவின் சீஷராகவும் பரலோகத்தின் ஸ்தானாதிபதியாகவும், மகிமையின் ராஜாவைப் பின்பற்று! இயேசுவின் நாமம்… என்ற நாமத்தின் மகிமைக்காக மாத்திரமே அவரைப் பின்பற்று!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!