உன் முழு இருதயத்தோடும் ஆண்டவரை நம்பு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் முழு இருதயத்தோடும் ஆண்டவரை நம்பு!

நீதிமொழிகள் 3:5-6-ல் வேதாகமம் சொல்கிறது, “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”

நீ நம்பு… நீ ஆண்டவரை நம்பலாம். அவர் உன்னை நேசிக்கிறார், உனக்குச் செவிகொடுக்கிறார். அவர் உன் கண்ணீரின் சத்தத்தைக் கூட கேட்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது (வேதாகமத்தில் சங்கீதம் 6:8). அவர் உன் நண்பராய் இருக்கிறார், நீ இப்போதே உன் இருதயத்தைத் திறந்து பேச ஆரம்பிக்கலாம்!

  • கர்த்தருக்குள்… அவர் ஒருவரே நித்தியமாக வியாபித்திருப்பவர். அவர் சர்வவல்லமையுள்ள தேவன்! “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” (வேதாகமம், எரேமியா 17:7)
  • உன் முழு மனதுடன்… நம் முழு மனதோடு ஆண்டவரைத் தேடினால், அவரை நாம் கண்டடைவோம். நாம் அவரைக் கண்டுபிடிப்போம். உன் இருதயத்தை அவருக்கு நேராகத் திருப்பு. அவரைத் தேடுவதில் உன் முழு இருதயத்தையும் செலுத்து!
  • உன் சுய புத்தியின் மேல் சாயாதே… உன் திறமை, உன் புரிதல் மற்றும் உன் செயல்திறன்களுக்கும் அதிகமான தீர்வுகள் ஆண்டவரிடம் இருக்கிறது. உன்னுடையதை விட அவருடைய திறமைகளை சார்ந்துகொள்வது எப்போதுமே சிறந்தது!
  • உன் எல்லா வழிகளிலும் அவரை அங்கீகரிப்பாயாக… இதன் அர்த்தம் ஆண்டவரை எல்லாவற்றிற்கும் மேலான இடத்தில் வைப்பதாகும். அவருக்கு உன் கதவை அடைத்துவிடாதே – உனது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் கூட அவரைச் சேர்த்துக் கொள்!

மேலும் அவர் உன்னைத் தமது பாதைகளில் வழிநடத்துவார்… ஏசாயா 40:4-ல் வேதம் சொல்வது போல், மலைகளைத் தாழ்த்தவோ அல்லது பள்ளத்தாக்குகளை உயர்த்தவோ தேவனால் மட்டுமே முடியும். அவர் உனக்காக இதைச் செய்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன் மற்றும் அறிக்கையிடுகிறேன், ஏனென்றால், நீ முழு மனதுடன் அவரை நம்புகிறாய்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!