உன் மீது ஆண்டவர் காட்டும் அன்பு நிகரற்றது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் மீது ஆண்டவர் காட்டும் அன்பு நிகரற்றது!

இப்பிரபஞ்சத்தின் மிகப்பெரிய சக்தி எது என்று யாராவது உன்னிடம் கேட்டால், நீ என்ன சொல்வாய்?

சிலர், பூமியைப் பற்றிச் சிந்தித்து, அமெரிக்கா அல்லது சீனா என்று சொல்லலாம்… மற்றவர்கள் இப்பிரபஞ்சத்தின் மிகப்பெரிய சக்தி அன்பு என்று கூறுவார்கள். அது தான் உண்மை!

இந்த உண்மையை ஆண்டவர் ஆதி முதற்கொண்டு சொல்லியிருக்கிறார். அன்பே உலகின் மிகப்பெரிய சக்தி என்றால், அதற்குக் காரணம் ஆண்டவர் ஒருவரே ஆவார், அவர் தான் இந்த வல்லமையை ஒருகாலத்தில் செயல்படுத்த துவங்கினார்! உண்மையிலேயே, ஒரு விசேஷித்த நாளில், வேறு எந்த மனிதனும் செய்ய முடியாத ஒரு செயலின் மூலம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து வல்லமையும் வெளிப்படுத்தப்பட்டது: பாவம் அறியாதவராகிய இயேசுவின் ஜீவனை சகல மனிதர்களின் இரட்சிப்புக்காக ஈடு இணையற்ற பரிசாகக் கொடுத்து, அன்பை நமக்கு வெளிப்படுத்தியதுதான் அந்த செயலாகும்.

இத்தகைய தியாகமான பலியினால் தொடப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுல், ஒரு நாள் இப்படி எழுதினார், “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.” (ரோமர் 1:16)

இயேசு செய்த இந்தச் செயல் சிலருக்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம்… ஆனால் அது நிகரற்றதும், பாரபட்சமற்ற அன்பின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. இதுவே எல்லையற்ற அன்பின் வல்லமை. உனக்காகவே இந்த அன்பு வெளிப்பட்டிருக்கிறது.

இந்த காதலர் தினத்தில், ஆண்டவர் உன் மீது வைத்திருக்கும் அன்பானது மிகவும் வல்லமை வாய்ந்தது, நிகரற்றது மற்றும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பெரியது என்பதை நீ உன் உள்ளத்தின் ஆழத்தில் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்!

தேவனுடைய அன்பு நிகரற்றது, ஒப்பிட முடியாதது, நாம் கற்பனை செய்து பார்க்க முடியாதது.

இன்று, “அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதப்பா” என்ற இந்தப் பாடலைக் கேட்கையில், அவருடைய அன்பைப் பற்றிய இன்னும் ஆழமான புரிதலுக்குள் நீ பிரவேசிப்பாயாக! https://youtu.be/qLWvYllbY40?si=ZII3ko2z3LxiOMqD

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!