உன் மலையைப் பார்த்துப் பெயர்ந்துபோகும்படி சொல்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் மலையைப் பார்த்துப் பெயர்ந்துபோகும்படி சொல்!

நண்பனே/தோழியே, உனக்கெதிராக மலைபோன்ற சூழ்நிலை எழுகிறதா? கஷ்டங்கள், பிரச்சனைகள், உடைந்த உறவுகள், சோகம், தனிமை, வியாதி என்பன போன்ற பெரிய மலைகள் உனக்கு எதிராக எழும்பி நிற்கிறதா?

இன்று, இயேசுவின் வார்த்தைகளின்படியே, இந்த மலையைப் பெயர்த்துப்போடுவதற்கு உன்னை அழைக்கிறேன்! “எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மாற்கு 11:23)

இந்த அதிசயத்திற்கான முதல் திறவுகோல் அறிக்கையிடுதல்தான். “மலையே, நீ பெயர்ந்துபோவாய்; நீ அப்புறப்படுத்தப்பட்டு கடலில் தள்ளுண்டு போவாயாக! நான் ஆண்டவரை விசுவாசிப்பதால்… அவர் கிரியை செய்வார்” என்று நீ அறிக்கையிட வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகிறேன். உன் வாழ்க்கையில் ஆண்டவரின் இரக்கங்களை நீ அறிக்கையிடுவாயாக!

இந்த அதிசயத்திற்கான இரண்டாவது திறவுகோல் உனது விசுவாசமே ஆகும் : “தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால்…” என்று எழுதப்பட்டுள்ளது. சந்தேகம் வேண்டாம்… விசுவாசி! தேவன் மீதான உன் விசுவாசம்தான் அதிசயத்திற்கான கதவைத் திறக்கும் திறவுகோல்.

என் நண்பர் ஒருவர், “மலையே, நீ டென்னிஸ் விளையாட்டுக் காலணிகளை அணிந்துகொண்டு ஓடத் தொடங்குவது நல்லது… ஏனென்றால், நீ இங்கு இருப்பதை நான் பார்க்க விரும்பவில்லை” என்று கூறியதுபோல் நாம் அறிக்கையிட வேண்டும்‌.

இந்த செய்தியை நிறைவு செய்வதற்கு முன் நான் உன்னிடம் இன்னொரு நற்செய்தியை சொல்ல விரும்புகிறேன். விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமான இயேசு நமக்கு உண்டு. (எபிரெயர் 12 : 1) உன் விசுவாசம் வளரப் போகிறது, உனது மலை போன்ற பிரச்சனை தகர்ந்து அப்புறமாக நகரப் போகிறது!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “அதிக அளவு விரக்தியும், தனிமையும், அடிமைத்தனமும் நிறைந்த ஒரு இடத்தில் நான் வாழ்கிறேன்; மற்றும் பெயரளவில் செயல்படும் திருச்சபைகள் மட்டுமே இங்கு உள்ளன. ஒவ்வொரு நாள் காலையிலும் ஆண்டவருடைய வார்த்தையிலிருந்து நீங்கள் எனக்கு அளிக்கும் ஊக்கத்தினால், என்னால் நேர்மறையான எண்ணத்தைக் கொண்டிருக்க முடிகிறது, மேலும் ஆண்டவரின் வழிநடத்துதலால் என்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நான் அறிவேன். என் குடும்ப சூழ்நிலையைப் பார்த்து நம்பிக்கையை இழந்துவிடாமல் இருக்க அது எனக்கு உதவுகிறது.” (ஜான்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!