உன் பெயர் என் உள்ளங்கைகளில் பொறிக்கப்பட்டுள்ளது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் பெயர் என் உள்ளங்கைகளில் பொறிக்கப்பட்டுள்ளது!

இன்று இயேசு உன்னைப் பார்த்து …

“பார், உன் பெயர் என் கைகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

உன்னை மறந்துவிட்டேன் என்று நினைக்கிறாயா? என்னால் எப்படி மறக்க முடியும்?

என் இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் நீ இருக்கிறாய். நான் உன்னை உணர்வுப்பூர்வமாக, நித்திய நித்தியமாய் நேசிக்கிறேன்.

உன்னை சிருஷ்டித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டு. நீ என் தலைசிறந்த படைப்பாய் இருக்கிறாய், நான் உன்னை நேசிக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் உன்னுடன் அதிகமதிகமாகப் பேசவும், உன்னைக் கவனித்துக்கொள்ளவும், உன் ஒவ்வொரு நடையையும் வழிநடத்தவும் நான் விரும்புகிறேன்.

என் சிநேகிதனே/சிநேகிதியே, நான் உன்னைப் பார்க்கிறேன், நான் உன்னை மறக்க மாட்டேன். நான் இங்கேதான் இருக்கிறேன். நான் உனக்கு அருகில் இருக்கிறேன்” என்று சொல்லுகிறார்.

இன்று என்னுடன் சேர்ந்து ஜெபிக்க நான் உன்னை அழைக்கிறேன்: “இயேசுவே, என்னை நேசிப்பதற்காக நன்றி. நீர் என்னை மறந்துவிடவில்லை என்பதை நான் அறிவேன். என்னுடன் மிகவும் பட்சமாகவும் நெருக்கமாகவும் இருப்பதற்காக நன்றி. நான் உம்மை நேசிக்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்”.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!