உன் பெயர் அவரது கரங்களில் பொறிக்கப்பட்டுள்ளது
முகப்பு ›› அற்புதங்கள் ››
ஒருபோதும் அழியாத சில முத்திரைப் பதிவுகள் உள்ளன. காலத்தால் அழிக்க முடியாதபடி, மரத்தில் உளிகொண்டு செதுக்கப்பட்ட ஒரு கீற்றைப்போல அவைகளது அடையாளங்கள் நித்தியமானவை…
இயேசு இப்படிப்பட்ட முத்திரையை, அதாவது, ஒரு அழியாத கல்வெட்டை தமது கரத்தில் பொறித்து வைத்திருக்கிறார் என்று வேதாகமம் சொல்கிறது… “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது…” (ஏசாயா 49:16)
ஆம், உன் பெயர் அவருடைய கரங்களில் பொறிக்கப்பட்டுள்ளது… இந்த நித்திய அடையாளமாகிய அழியாத கல்வெட்டைபோன்றது, நீ ஆண்டவருடைய பிள்ளை என்பதற்கும், என்றென்றும் நீ அவருக்குச் சொந்தமான ஒரு நபர் என்பதற்குமான ஒரு மாறாத அடையாளமாகும்.
உனது பெயரை ஆண்டவர் தமது கரங்களிலிருந்து நீக்கிப்போடுவதற்கும், அதை அழித்துவிடுவதற்கும் அவரிடம் ஏராளமாக காரணங்கள் இருப்பதாக நீ சொல்லிக்கொண்ட நாட்கள் பல இருந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்ய விரும்புவதில்லை. அவர் தாமே அப்படி அழித்துவிட விரும்பினாலும், அவரால் அழித்துவிட முடியாது… அவர் என்றும் அழியாத மையைத் தேர்ந்தேடுத்துக்கொண்டார். அவர் உன் மீது தம்முடைய நித்திய அன்பை வெளிப்படுத்தத் தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தத் தேர்ந்தெடுத்தார்.
கர்த்தரின் அன்பினால் நான் உன்னை நேசிக்கிறேன்.
