உன் பார்வை மாறுகிறது

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் பார்வை மாறுகிறது

ஒரு ஒரே சுழல் வீச்சு மற்றும் ஒரு சில கற்களைக் கொண்டு ஒரு சாதாரண மேய்ப்பன் ஒரு ராட்சதனைத் தோற்கடித்ததான, சிறிய தாவீது மற்றும் பெரிய கோலியாத்தின் கதையை நீ கேள்விப்பட்டிருப்பாய் என்று நான் நம்புகிறேன்! (1 சாமுவேல் 17ல் வேதாகமத்தில் உள்ள கதையை வாசியுங்கள்)

இந்த மகத்தான வெற்றிக்கான சிறிய திறவுகோல்கள் இங்கே உள்ளன: ஒரு சுழல் வீச்சு, சில கற்கள், தைரியம் மற்றும் இஸ்ரவேலின் சேனைகளின் தேவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகிய இவைகளே ஆகும்!

இன்று, உன் பார்வை மாறக்கூடும் என்று நான் நம்புகிறேன். யுத்தகளம் பற்றிய உன் பார்வையும் மாறப்போகிறது. உன் ஜெயத்திற்கான பாதையைத் தடுக்கும் தடைகளையும் சத்துருவின் படைகளையும் அளவிடும் உன் வழியும் மாறப்போகிறது!

சில நேரங்களில் மிகவும் சிக்கலான தத்துவத்தைப் போல காணப்படுகின்ற, மிகவும் தர்க்கரீதியான உன் சரீரப் பிரகாரமான கண்கள் மூடப்பட்டிருக்கின்றன, உன் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படுகின்றன. உன் பார்வை கூர்மையாகிறது, தெளிவாகிறது, மற்றும் உன் கண்முன்னே… ஜெயம் வெளிப்படுகிறது.

ஆம், தேவன் எழுந்தருளுகிறார். ஆம், தேவன் உனக்காக முன் சென்று உனக்காக யுத்தம் பண்ணுகிறார்! இதோ ஜெயம் பெற்றுக்கொள்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!