உன் பார்வை அவர் மீதே இருக்கட்டும்! 👀

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் பார்வை அவர் மீதே இருக்கட்டும்! 👀

நீ யாரையாவது உன் பார்வையிலிருந்து தப்பவிட்டிருக்கிறாயா?

உதாரணமாக, நீ மும்முரமாக ஷாப்பிங் செய்துகொண்டிருக்கையில், திடீரென்று, உனது இளைய குழந்தை மறைந்துவிட்டது என்று வைத்துக்கொள்… உனக்குள் பயம் ஏற்படுகிறது! இறுதியாக, நீ அக்குழந்தையை ஒரு மிட்டாய் கடையில் கண்டுபிடிக்கிறாய். என்ன ஒரு புத்திசாலித்தனமான மறைவிடம் அது! இப்படி ஒரு சம்பவம் எப்போதாவது உனக்கு நேர்ந்திருந்தால், உன் குழந்தை எங்கிருக்கிறது என்று தெரியாததால் ஏற்படும் பயம் பற்றி உனக்கு நன்றாகத் தெரிந்திருக்கும், ஏனென்றால் நீ உன் குழந்தையை உன் பார்வையிலிருந்து சில நொடிகள் தப்பவிட்டுவிட்டாய்.

உன் பார்வையிலிருந்து தப்பவிடாமல், நீ பற்றிக்கொள்ள வேண்டிய வேறு ஒரு நபர் இருக்கிறார். நீ அவரைப் பார்க்காமல் உன் பார்வையிலிருந்து தப்பவிட்டால், உன் வாழ்க்கை பயம் அல்லது பாதுகாப்பின்மைக்கு நேராக உன்னை நடத்திச்செல்லும். யார் அவர், அவர்தான் இயேசு! இந்த நாளிலும், ஒரு நிமிடம் கூட, ஆண்டவராகிய இயேசு உன் பார்வையிலிருந்து விலகிவிடாமல் இருக்கும்படி கவனமாய் இரு என்று சொல்லி நான் உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன்.

சங்கீதக்காரனாகிய தாவீது, நாம் பிறக்கும் முன்னரே இவ்வாறு எழுதி வைத்துள்ளான், “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.” (சங்கீதம் 16:8)

உன் கண்களை எப்பொழுதும் கர்த்தர் மீது வைத்திரு, அவரை எப்போதும் உன் ஆவிக்குரிய கண்களுக்கு முன்பாக வைத்திரு. ஒவ்வொரு நொடியும் அவர் இருக்கிறார்… நீ அவரை உணராவிட்டாலும், உன்னை நடுங்க வைக்கும் (உனக்கு எதிரான சூழல், கோபம்) சூழலிலும், நீ எதிர்பாராத ஒரு காரியம் நடக்கும்போதும், உன் சூழ்நிலைகளுக்கு நடுவில் அவருடைய பிரசன்னத்தை நீ மறந்துவிட்டபோதிலும், அவர் எப்போதும் மாறாதவராய் உனக்கு அருகில் இருக்கிறார்.

ஆண்டவர் உன் வலது பாரிசத்தில் இருப்பதால், பலவீனம் உன்னை மேற்கொள்ளும் என்று நீ பயப்பட வேண்டியதில்லை. எப்பொழுதும், இயேசுவை ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீ பார்க்க முயற்சிசெய். அப்போது நீ அவருடைய பிரசன்னத்தால் உற்சாகப்படுத்தப்படுவாய், மற்றவர்களையும் உன்னால் இப்படி ஊக்குவிக்க முடியும். 😊

என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும்படி உன்னை அழைக்கிறேன், “கர்த்தராகிய இயேசுவே, நீர் யார் என்பதற்காகவும், நீர் இதுவரை செய்தவற்றுக்காகவும், எனக்காக மீண்டும் செய்பவைகளுக்காகவும் நன்றி. இன்று என் கண்களை உம் மீது நிலையாக வைத்திருக்க எனக்கு உதவி செய்யும். என் பிரச்சனையில் கவனம் செலுத்தாமல், உம் மீது நான் கவனம் செலுத்த வேண்டும். இந்த நாளின் ஒவ்வொரு நொடியும் என் பார்வை உம் மீது இருக்கட்டும்! உமது பரிசுத்த ஆவியானவரால் என்னை உற்சாகப்படுத்தி வழிநடத்தும்படி மன்றாடுகிறேன். நன்றி, இயேசுவே! ஆமென்.”

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!