உன் பாரங்களை என் மீது இறக்கி வை!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் பாரங்களை என் மீது இறக்கி வை!

இன்று உனக்காக கர்த்தர் ஒரு சிறப்பான வார்த்தையை வைத்திருக்கிறார் என்றும், அது அவரது இருதயத்தை உனக்கு வெளிப்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன். இதை நீ அனுபவித்து மகிழ்!

“என்னுடைய சமூகத்தை அதிகமாக அனுபவிப்பதற்காக நீ தாகமாய் இருக்கிறாயா?

என்னைப் பற்றி இன்னும் அதிகமாகக் கேட்டறிய தாகமாயிருக்கிறாயா?

என்னைக் காண வாஞ்சையாய் இருக்கிறாயா?

அப்படியானால் என் சத்தத்தைக் கேட்டு, சரியான பாதையை நான் உனக்குக் காட்ட எனக்கு இடங்கொடு. நீ உன் தாயின் கருவில் இருக்கும்போதே உனக்காக நான் வரைந்த சரியான வரைபடத்தை நான் உனக்கு வெளிப்படுத்த அனுமதி.

சூரிய வெளிச்சம் உன் முகத்தைத் தொடுவதற்கு முன்பே அல்லது நட்சத்திரங்கள் உன் தொட்டிலுக்கு ஒளி வீசும் முன்னரே… அப்போதிருந்தே நான் உன்னை நேசித்தேன். உனக்காக அழகான விஷயங்களை நான் ஏற்கனவே திருஷ்டாங்கப்படுத்தியுள்ளேன்; அவை எல்லாவற்றைப் பற்றியும் நான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.

என்னைத் தெரிந்துகொள்.

என்னை நம்பு.

என்னுடன் வா.

உன் பாரங்களை என் மீது இறக்கி வை.

உனக்கு பாரமாக இருப்பவைகளையும் உன்னை நெருக்கி ஒடுக்குபவைகளையும் நான் சுமக்க என்னை அனுமதி. என் தோள்கள் உன்னுடையதை விட மிகவும் பரந்து விரிந்தவை. உனக்கு மிகுந்த பார சுமையாக இருப்பதை என்னால் இலகுவாகச் சுமக்க முடியும். உனக்கு ஒரு புதிய சுவாசத்தைக் கொடுத்து, ஒரே வார்த்தையினால், உன்னைப் பாரப்படுத்தும் சுமை யாவற்றையும் என்னால் நீக்கிப்போட முடியும்.

நான் இங்கே இருக்கிறேன்.

நான் உனக்கு உதவ விரும்புகிறேன்.

என்னை நம்பு.

பொங்கிவரும் ஜீவத்தண்ணீரைப்போல உன்னில் உள்ள அதிசயத்தை வெளிப்படுத்த எனக்கு இடங்கொடு!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!