உன் பரலோகப் பிதாவின் கண்ணோட்டத்தைப் பின்பற்று!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் பரலோகப் பிதாவின் கண்ணோட்டத்தைப் பின்பற்று!

உன் பரலோகப் பிதா ஒரு மனிதனைப் போல சிந்திப்பதோ, பேசுவதோ அல்லது செயல்படுவதோ இல்லை. விஷயங்களைப் பார்க்கும் விதத்தில் அவர் முற்றிலும் தனித்துவமானவரும் உயர்ந்தவருமாய் இருக்கிறார். ஒரு சூழ்நிலையைப் பற்றிய அவரது கண்ணோட்டம் எப்போதும் நியாயமானதாகவும், பரிசுத்தத்தால் நிறைந்ததாகவும் இருக்கும்.

“பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.” (வேதாகமத்தில் ஏசாயா 55:9ஐப் பார்க்கவும்)

உன் குடும்ப வாழ்க்கை, உன் தொழில் மற்றும் நீ உணரும் உணர்ச்சிகளை மதிப்பிடுவதற்கு சமூகம் உனக்கு பல்வேறு “வரையறை குறிப்புகளை” வழங்குகிறது. டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பத்திரிகைகள் போன்றவற்றின் மூலம் “சரியான” வாழ்க்கைக்கான மாதிரி, வெற்றிகரமான திருமண வாழ்விற்கான 10 ரகசியங்கள் அல்லது தனிப்பட்ட வாழ்வில் முழுமையடைவதற்கான 15 படிகள் ஆகியவற்றை உனக்குக் காண்பிக்கின்றன.

காரியங்களைப் பார்க்கவும் மதிப்பிடவும் மற்றொரு வழி உண்டு— நீ தேவனுடைய கண்ணோட்டத்தில் அவற்றைப் பார்க்க வேண்டும்! ஒரு சூழ்நிலையைப் பற்றிய கர்த்தருடைய கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்வது என்பது, உன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெளிவாக உன்னால் அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் கூட, அவர் சரியானதைச் செய்பவர் என்றும் அவர் உனக்காக செயல்படுவார் என்றும் நீ நம்பத் தீர்மானிப்பதாகும்.

உனக்குள் கேள்விகள் எழும்போது,​ எல்லாவற்றிற்கும் பதிலளிக்கவோ, எல்லாவற்றையும் தீர்க்கவோ முயற்சிக்காதே… அமைதியாகவும் நம்பிக்கையுடனும் காத்திரு (வேதாகமத்தில், ஏசாயா 30:15 ஐப் பார்க்கவும்).

கர்த்தரிடத்தில் ஆலோசனையைப் பெற்றுக்கொள்; அவருடைய ஆலோசனையைக் கேள். அவருடைய ஆலோசனையை நாடு, ஏனென்றால் உன்னுடைய நினைவுகள் அவருடைய நினைவுகள் அல்ல என்று வேதாகமம் சொல்கிறது.

உன்னை ஆறுதல்படுத்துவது எப்படி என்பதையும், உன் சூழ்நிலைக்கு வெளிச்சத்தைத் தருவது எப்படி என்பதையும் உன்னை சரியான பாதையில் வழிநடத்துவது எப்படி என்பதையும் ஆண்டவர் எப்போதும் அறிந்திருக்கிறார். அவரை நம்பு, அப்போதுதான் நீ சரியான முடிவுகளை எடுப்பாய்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!