உன் நிலைமை சரியாக இல்லாதபோதிலும் தேவன் உன்னோடு இருக்கிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் நிலைமை சரியாக இல்லாதபோதிலும் தேவன் உன்னோடு இருக்கிறார்!

நம்மைச் சுற்றி எல்லாமே தவறாக நடப்பதாகத் தோன்றும் நேரங்கள் நம் வாழ்வில் உள்ளன. இது திகைப்பூட்டுவதாக இருந்தாலும் கூடு, நீ ஒரு சுவற்றை எதிர்நோக்கி நிற்கும் போதுதான் அதன் மீது ஒரு கயிற்றை எறிந்து அதைப் பற்றிக்கொண்டு மேல்நோக்கி ஏறி, உனக்கு முன்னாள் இருக்கும் அந்த மதிலை உன்னால் கடந்து செல்லக் கூடும். நீ ஒரு மலையின் அடிவாரத்தில் இருக்கும்போதுதான் அதை ஏறி கடந்து செல்வதற்கான சரியான இடத்தில் இருக்கிறாய்!

“தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.” (வேதாகமத்தில் சங்கீதம் 108:13ஐப் பார்க்கவும்)

  • தேவனால் நீ தைரியமாகக் காரியங்களைச் செய்வாய்!
  • சிக்கலானதாகவோ, குழப்பமாகவோ அல்லது தெளிவற்றதாகவோ தோன்றும் சூழ்நிலையின் மத்தியில் அவர் தமது சத்துவத்தையும், சமாதானத்தையும், தைரியத்தையும் உனக்கு தருகிறார்.
  • அவர் சர்வவல்லமையுள்ளவராய் இருக்கிறார். முட்டுச்சந்துபோல காணப்படும் இந்தச் சூழ்நிலையிலிருந்து வெளியேற உனக்கு ஒரு வழியை உருவாக்கியிருக்கிறார்.
  • அவர் உன் சத்துருக்களை நசுக்கி, அவர்களைத் துரத்தியடிப்பவராய் இருக்கிறார்.

உன் நிலைமை சரியாக இல்லாதிருக்கும்போதும், உன்னைக் கவனித்துக்கொண்டே இருக்கும் கர்த்தர் ஒருவர் இருக்கிறார்! சத்துவம் மற்றும் நம்பிக்கையோடு விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது. அவர் பார்க்கிற வண்ணமாகவே நீயும் காரியங்களைப் பார்க்கவும், அவருடைய வல்லமை மற்றும் அதிசயத்தை அனுபவிக்கவும் ஆண்டவரின் கிருபையைப் பெற்றுக்கொள்!

சாட்சி: “தனிப்பட்ட சூழ்நிலைகள் நிமித்தமாக நான் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன், தற்போது திருச்சபைக்குக் கூட போக முடியவில்லை. ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த தினசரி ஊக்க மின்னஞ்சல் ஒவ்வொரு நாளும் என்னுடன் பேசுகிறது, என்னை ஊக்கப்படுத்துகிறது, என் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை எனக்குத் தருகிறது. வாழ்க்கை இப்போது சவாலானதாக இருந்தாலும், தேவன் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த சவாலை எனக்குக் கொடுத்திருக்கிறார் என்பதையும், அவருடைய உதவியுடன் என்னால் இதை சமாளிக்க முடியும் என்பதையும் நான் அறிவேன். சகோதரர் எரிக், இந்த நேரத்தில் உங்கள் வார்த்தைகளானது மிகவும் ஆறுதல் அளிப்பதாகவும் எங்கள் குடும்பத்திற்கு ஒரு உண்மையான ஆசீர்வாதமாகவும் இருக்கிறது. நன்றி.” (ஜான்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!