உன் ஜெபங்களுக்கு விடை கிடைப்பதை நீ பார்க்க விரும்புகிறாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் ஜெபங்களுக்கு விடை கிடைப்பதை நீ பார்க்க விரும்புகிறாயா?

இந்த தருணத்தில் ஆண்டவரிடம் எழும்பிக் கொண்டிருக்கும் ஜெபங்களின் எண்ணிக்கையை கற்பனை செய்து பார். அவை அனைத்தும் கேட்கப்படும், ஆனால் அதில் சிலவற்றிற்கு பதில் கொடுக்கப்படும், சிலவற்றிற்கு பதில் கொடுக்கப்படாது. இதை நினைத்து பார்க்கும் போது, ஏன்? என்று யோசித்தேன். ஆகையால் அதைப் பற்றி ஜெபித்தேன். அப்போது ஆண்டவர் எனக்கு இதைக் காண்பித்தார்:

அனைத்து ஜெபங்களும் ஆண்டவரின் சிங்காசனத்திற்கு முன்பு வருவதை கற்பனை செய்து பார். சில ஜெபங்கள் உடனடியாக நிறைவேறும்படி அங்கீகரிக்க படுகின்றன. பிறவியில் நொண்டியான மனிதனிடம் பேதுரு பேசிக்கொண்டிருப்பதை சிந்தித்து பார்: “வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட…” அவர் இதை சொன்ன மாத்திரம் அங்கே அற்புதம் நடந்தது. இந்த பத்தியை அப்போஸ்தலர் 3ம் அதிகாரத்தில் நீ வாசிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட ஜெபங்களுக்கு மூன்று பொதுவான பண்புகள் உள்ளன : அன்பு, அதிகாரம், துணிவு

முதல் பண்பு : அன்பு. அன்புதான் தலையாய கட்டளை. 1 கொரிந்தியர் 13ன் படி அன்புதான் நாம் செய்யும் எல்லா வேலைகளுக்கும் ஜெபங்களுக்கும் பின்னல் இருக்கவேண்டிய நோக்கம். ஆண்டவர் அன்பின் உருவானவர். அன்பு அவரை தொடுவதால் அவர் அதற்க்கு பதிலளிக்கிறார்.

இரண்டாம் பண்பு : அதிகாரம். நம்முடையதல்ல, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடையது. பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள சகல அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவருடைய நாமத்தினால், அதாவது அவர் சார்பாக பிதாவிடம் நம்மை கேட்கும்படி ஆண்டவர் இயேசு நமக்கு சொல்லியிருக்கிறார். இது ஒரு சூத்திரம் அல்ல, மாறாக ஒரு அந்தஸ்து.

மூன்றாவது பண்பு: துணிவு. இது விசுவாசத்தை செயலில் பார்ப்பது. அச்சமில்லா விசுவாசம். ஜெபத்திற்கான பதிலை இறுக்கி பிடிக்கும் அளவிற்கு துணிவுள்ள விசுவாசம். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” என்று வேதாகமம் சொல்கிறது. எபிரெயர் 11:6ஐ பார்க்கவும்.

கேட்கப்பட்டதா ஜெபங்களில், இதிலிருந்து ஒன்றோ, இரண்டோ அல்லது எல்லா பண்புகளும் இல்லாமல் இருக்கிறது. நீ ஜெபிக்கும்போதெல்லாம் இந்த மூன்றையும் நினைவில்கொள். ஆண்டவரே தேவன், அவர் சகலத்தின் ராஜா மற்றும் அரசர் என்பதை மறவாமல்.

உன் ஜெபங்கள் கேட்கப்பட வேண்டுமென்று என் முழு உள்ளத்தோடு நான் விரும்புகிறேன். இன்று நீ உன் அற்புதத்தை பெற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையுடன், ஆண்டவர் இயேசுவின் நாமத்தில், அன்பிலும் விசுவாசத்திலும் உனக்காக நான் கேட்பது இதுவே.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!