உன் சூழ்நிலையை திரும்பவும் ஆண்டவரின் கரத்தில் ஒப்புக்கொடு

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் சூழ்நிலையை திரும்பவும் ஆண்டவரின் கரத்தில் ஒப்புக்கொடு

“அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1 பேதுரு 5:7)

நீ சோர்ந்துபோயிருக்கிறாயா? சலிப்படைந்து அல்லது வலுவிழந்து இருக்கிறாயா? ஒவ்வொரு நாளும் முடிவடையாத போராட்டமாகத் தோன்றினால், மன உறுதியுடன் இரு… இந்தப் போரின் வழியாக ஒரு ஆசீர்வாதம் வரும்.

சோதிக்கப்படும் காலங்களில், நீ ஆண்டவரின் மற்றொரு கோணத்தை கண்டறிய முடியும். அவருடன் உன் உறவை வளர்த்துக்கொள். அவரை நன்றாக… இன்னும் ஆழமாக… வித்தியாசமாக அறிந்துகொள்.

ஆண்டவர் உன் பாதுகாவலர் என்பதை அறிந்திருப்பது ஒரு விஷயம், ஆனால் அதை நடைமுறையில் வாழ்வது வேறு விஷயம்.

உன் கவலைகளை விட்டுவிட்டு உன் சூழ்நிலைகளை மீண்டும் ஆண்டவரின் கரங்களில் ஒப்புக்கொடுக்க நான் உன்னை அழைக்கிறேன்.

என் நண்பனே/தோழியே, உன் கண்ணீரை உலர்த்திக்கொண்டு உன் தலையை உயர்த்து, ஏனென்றால் நீ சோதனையின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், அது உன்னை ஆண்டவரின் இதயத்திற்கு நெருக்கமாக கொண்டு வருகிறது என்பது உறுதி! உன்னுடைய நல்ல பரலோகத் தகப்பனான அவர், உன்னை பார்த்துக்கொள்வார் – ஆம், உன்னைத்தான்.

ஒன்றாக ஜெபிப்போம்: “ஆண்டவரே, என் கவலைகள் அனைத்தையும் இப்போது உம் மீது வைக்க நான் இப்போது தேர்ந்துக் கொள்கிறேன். உம்முடைய வழிகள் உயர்ந்தவை… நான் விட்டுவிடுகிறேன், உம்மையே நம்புகிறேன். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி என்னை உம்முடன் நெருக்கமாக்கியதற்கு நன்றி! உம் வல்லமையுள்ள நாமத்தில், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!