உன் சிறந்த நண்பர்கள் இருவர் யார் என்று கேட்டால், யாரை சொல்லுவாய்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் சிறந்த நண்பர்கள் இருவர் யார் என்று கேட்டால், யாரை சொல்லுவாய்?

விசுவாசத்தையும் ஞானத்தையும் ஒன்றிணைத்து புரிந்துகொள்வதில் சிக்கல் இருப்பதாக ஒரு நண்பர் என்னிடம் கூறினார். அவர் இரண்டையும் வேறுபடுத்தி, விசுவாசத்தை வெற்றியுடனும் மற்றும் நிரந்தரமாக ஆபத்தை எதிர்கொள்ளும் மனப்பான்மையுடனும் ஒப்புமைப்படுத்தினார். அதே நேரத்தில் ஞானத்தை குறைந்த ஆபத்துகளுடன் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்தல் என்று தொடர்புபடுத்தினார்.

விசுவாசமும் ஞானமும் ஒன்றாகச் செயல்படாததால், உன் வாழ்க்கைக்கான ஆண்டவருடைய திட்டத்தை அனுபவிப்பதில் உனக்கும் சிக்கல் நிலவுகிறதா? விசுவாசமும் ஞானமும் உண்மையில் சிறந்த நண்பர்கள். அவை உனக்கு இருக்க வேண்டிய சிறந்த நண்பர்கள்.

வேதாகமம் நமக்குச் சொல்கிறது, “என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும். அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.” (நீதிமொழிகள் 24:13-14)

ஆண்டவருடைய திட்டத்தை நிறைவேற்ற, நீ விசுவாசத்தையும் ஞானத்தையும் தேடு!

ஆண்டவர் பூரண பிதாவாய் இருக்கிறார். விசுவாசம் என்பது வார்த்தையைக் கேட்பதிலிருந்து வருகிறது (ரோமர் 10:17).

எனவே ஆண்டவருடைய வார்த்தையை வாசிப்பதன் மூலமும், கேட்பதன் மூலமும், தியானிப்பதன் மூலமும் உன் விசுவாசத்தை வளர்த்துக்கொள். வேதாகமத்தையும் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலையும் வாசிப்பதன் மூலம் நீ தினமும் இதைச் செய்கிறாய்.

ஞானத்தைப் பொறுத்தவரை, ஆண்டவர் கேட்பவர்கள் யாவருக்கும் அதைக் கொடுக்கிறார். (யாக்கோபு 1:5) அதுவும் அடுக்கடுக்காக கட்டப்படுகிறது என்பதை மறந்துவிடாதே. ஒரு மேஜையை பெயிண்ட் செய்யும்போது, அந்த பெயிண்ட் ஆழமாக நுண்ணிய அடுக்குகளின் வழியாக நிரம்பி வண்ணம் பூசப்படுகிறது. ஒவ்வொரு அடுக்கையும் உன்னிப்பாக பூர்த்தி செய்தபின், அந்த மேஜை அற்புதமாகக் காட்சியளிக்கும். ஞானம் நம் வாழ்வில் அதே வழியில் கட்டப்பட்டுள்ளது. ஒரு நபரின் குணம் திடமானதாகவும் கிறிஸ்துவில் வேரூன்றினதாகவும் இருக்க, இந்த வழிமுறைகள் தேவைப்படுகிறது, அது காலத்தின் சோதனைக்குத் தப்பி நிலைத்து நிற்கும்படி கவனமாகவும் முறையாகவும் வர்ணம் பூசப்பட வேண்டும்.

ஆண்டவருடைய திட்டத்தை நிறைவேற்ற உனக்குத் தேவையான அனைத்தும் உன்னிடத்தில் உள்ளன. விசுவாசத்துடனும் ஞானத்துடனும் நட்பை வளர்த்துக்கொள்! நீ அவர் விரும்பும் நபராக ஆவதற்கு ஆண்டவர் அவற்றைப் பயன்படுத்துவார்.

பயப்படாதே. ‌பரிசுத்த ஆவியானவர் உன்னோடு இருக்கிறார். அவரே உன் வழிகாட்டி. பரத்திலிருந்து வரும் ஞானத்தை உனக்கு வெளிப்படுத்துவதும், உன் விசுவாசத்தைத் தூண்டிவிடுவதும் எப்படி என்பது அவருக்குத் தெரியும்!

என் அன்பான நண்பரே, கிறிஸ்துவுக்குள் உன் சகோதரனாக இருப்பதில் நான் பெருமிதமடைகிறேன். தொடர்ந்து ஓடு, மேலானவைகளை நாடு. நீ ஆண்டவரால் ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறாய்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “ஒரு பிரசங்கியாராக, நான் தினமும் மற்றவர்களை ஊக்குவிக்கிறேன். உண்மையில், அந்நியராக இருந்தும் அன்பு காட்டும் நபரால் ஊக்குவிக்கப்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த மூன்று மாதங்களும் எனக்கு ஒரு உண்மையான சவாலாக இருந்தது, உங்களது தினசரி “ஊக்கம்” உண்மையில் என்னை உற்சாகப்படுத்துகிறது. நன்றி.” (தெரசா, காரைக்கால்)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!