உன் சிறந்த கூட்டாளி யார்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் சிறந்த கூட்டாளி யார்?

நாட்கள் கடந்து செல்கின்றன, ஒவ்வொரு நாளும் முந்தையதை விட வித்தியாசமானதாக இருக்கிறது. ஒவ்வொரு கணமும் தனித்துவமானது, மகிழ்ச்சி, உற்சாகம், தவறான புரிதல் அல்லது மனச்சோர்வு ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. உண்மையைச் சொன்னால், கடினமான தருணங்களைக் கடந்து, அதைத் தாண்டிச் செல்வது மிகவும் சவாலாக உள்ளது. இருப்பினும், தனிப்பட்ட முறையில், நான் இயேசுவின் மீதும் அவருடைய வார்த்தையின் மீதும் என் கண்களைப் பதியவைக்கத் தேர்வு செய்கிறேன். ஏன்? ஏனென்றால் என் தேவன் உண்மையுள்ளவர்! நம் தேவன் நமக்கு ஒரு பலமான ஆயுதத்தை ஒப்படைத்துள்ளார். அது அவரது மகிழ்ச்சி!

நெகேமியா புத்தகம் நமக்கு ஒரு அழகான உதாரணத்தை அளிக்கிறது. தேவன் தங்களுக்கு அளித்திருந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை ஜனங்கள் கண்டறிந்ததும் மனமுடைந்து அழத் தொடங்குகிறார்கள் என்று நாம் வாசிக்கிறோம். ஆனால் அவர்களின் ஆளுநரான நெகேமியா, அவர்களை உற்சாகப்படுத்தி, மகிழ்ந்து களிகூரும்படி அவர்களுக்கு உபதேசிக்கிறார்! (நெகேமியா 8:9-10)

அதைத்தான் மக்கள் செய்தார்கள். தங்களால் அழ மட்டுமே முடியும் என்ற நிலையில், அவர்கள் வீட்டிற்குச் சென்று, விருந்து வைத்துக் கொண்டாடினர்.

மகிழ்ந்து களிகூருங்கள் என்று தேவன் உனக்குச் சொல்லும்போது, அவர் என்ன செய்கிறார் என்பதை அறிவார். உண்மையில், கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே உன்னுடைய பலம்! (நெகேமியா 8:10)

மனச்சோர்வு மற்றும் பிரச்சனையின்போது, இது உன் சிறந்த கூட்டாளியாக இருக்கும். என்னுடன் சேர்ந்து இந்த ஆராதனைப் பாடலைப் பாடி கர்த்தரைத் துதி. தேவன் தாமே உனக்கு பெலனாய் இருப்பாராக. https://youtu.be/U4ZMNEPoPC4?si=mu35Os3Sp-lJ8j5u

இன்று நீ சோர்வாகவோ அல்லது தோல்வியுற்றதாகவோ உணர்கிறாயா? ஆண்டவர் உனக்குக் கொடுக்க விரும்பும் மகிழ்ச்சியைப் பிடித்துக்கொள்! அவர் உன் சகாயர், உன் கோட்டை மற்றும் உன் நண்பர். இந்த மகிழ்ச்சி அவர் உனக்கு அளித்த பரிசு!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!