உன் சார்பில் ஆண்டவர் இருக்கிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் சார்பில் ஆண்டவர் இருக்கிறார்!

“என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்” (யோவான் 16:33)

ஆண்டவர் உன் பக்கம் இருக்கிறார் என்பதை நீ உணர்ந்தால், எதுவும் உன்னை தடுக்க முடியாது.

உன் வாழ்க்கைக்கான ஆண்டவருடைய திட்டத்தை நிறைவேற்ற நீ முற்படும்போது, ​​தடைகள், போர்கள் மற்றும் துன்பங்களை நீ சந்திக்க நேரிடும், ஆனால் பரலோகத்திலோ பூமியிலோ உள்ள எதுவும் உன்னை தடுக்க முடியாது!

ஆண்டவருடைய உதவியோடு, எல்லா சிரமங்களையும் தடைகளையும் நீ மேற்கொண்டு ஜெயிக்க முடியும், அது எதுவாக இருந்தாலும் சரி.

எல்லாம் சுலபமாக இருக்கும் என்று எதிர்பார்க்காதே. “திடன்கொள்! நான் உலகத்தை ஜெயித்தேன்’’ என்று சொல்பவரை எப்போதும் நினைவில்கொள். உன் கண்களை அவர் மீது நிலை நிறுத்து!

இயேசுவோடு, எல்லாம் சாத்தியமாகும். அவருடன், நீ வெற்றி பெறுவாய். அவருடன், இந்த சோதனையிலிருந்து வெளியேறுவாய். அவரோடு கூட, நீ ஜெயம்பெறுபவாய்!

என் அன்புக்குரியவரே, என்னுடன் ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்: “கர்த்தராகிய இயேசுவே, நீர் உலகத்தை ஜெயித்தீர். நான் உன்னைப் பின்தொடர்வதால் எதுவும் என்னைத் தடுக்க முடியாது. இன்று, நான் திடன் கொள்கின்றேன். உன்னுடன் நான், வெற்றிச் சிறப்பேன்! உம் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!