உன் கோபம் எங்கிருந்து வருகிறது என்பது உனக்குத் தெரியுமா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
அப்போது நிலவும் சூழ்நிலையினால் கோபம் வெளிப்படும்போது, அது எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது எளிது. எடுத்துக்காட்டாக, நீ மளிகைக் கடையில் நிற்கும்போது, ஒருவர் உன்னைத் தாண்டிச் சென்றுவிட்டு (அல்லது உன் வரிசையில் வராமல் முந்தி செல்வது) ஒரு மன்னிப்புக் கூட கேட்கவில்லை என்றால், அது உன்னைக் கோபப்படுத்திவிடுகிறது.
ஆனால் சில சமயங்களில் நாம் ஏன் கோபப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்வதே மிகவும் கடினமாக இருக்கும். முக்கியமாக, நாம் ஏன் கோபமாயிருக்கிறோம் என்பதை அறியாதிருப்போமானால்… கோபம் நம்முடைய ஆத்துமாவில் நித்திரை செய்து இளைப்பாறுவதுபோல தங்கியிருக்கிறது, பின் நேரம் வரும்போது எழும்புகிறது. ஒரு எரிமலையைப்போல, அது எந்த நேரத்திலும் பொங்கி எழலாம், அது எங்கிருந்து தோன்றியது என்பது உனக்குத் தெரியும் முன்பே, பேரழிவை ஏற்படுத்திவிடும்!
ஒருவேளை இப்படி உனக்கு ஏற்கனவே நடந்திருக்கலாம்…ஏன் கோபப்படுகிறாய் என்று தெரியாமலேயே நீ கோபப்படுகிறாய். இந்த மறைந்திருக்கும் கோபம் எங்கிருந்து வருகிறது?
- ஒருபோதும் மன்னிக்க முடியாத மனவருத்தம்,
- ஒரு சர்ச்சைக்குரிய குடும்ப சூழலில் “அறிந்துகொண்ட” நடத்தை,
- எதிர்பாராத முறிவு,
- புரிந்துகொள்ள முடியாத மரண பிரிவு அல்லது துக்கத்தின் நேரம்,
- இன்னும் பல காரணங்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம். உனக்குள் இந்த கோபத்தை உருவாக்குவது எது என்பதை ஆண்டவரால் மட்டுமே உனக்குத் தெளிவுபடுத்த முடியும்.
இந்தப் பிரச்சனையைப் பற்றி நீ கவலைப்படுகிறாய் என்றால், ஏன் என்று தெரியாமலேயே நீ கோபப்படுவாயானால், நீ அதிலிருந்து விடுபடும்படிக்கு, அது எங்கிருந்து தோன்றுகிறது என்பதை ஆண்டவர் உனக்கு வெளிப்படுத்தும்படி அவரிடம் கேட்பது முக்கியம்!
வேதாகமத்திலிருந்து இந்த வசனத்தை தியானிக்க நான் உன்னை அழைக்கிறேன்… “கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.” (வேதாகமத்தில் சங்கீதம் 37:8ஐ வாசித்துப் பார்க்கவும்)
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “45 வயதான என் கணவர் பணம் எதுவும் தராமல் என்னை விட்டுவிட்டு, இளம் வயது பெண் ஒருத்தியுடன் சென்றுவிட்டார். நான் மனக்கசப்போடும், கோபமாகவும், பழிவாங்கும் எண்ணத்துடனும் இருந்தேன். நான் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலைப் பெற்றுவருவதால், ஒருபோதும் எனக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்று நினைத்த சமாதானத்தையும் பெலனையும் இப்போது நான் உணர்கிறேன். எப்போதாவது ஒருமுறை அல்ல, ஒவ்வொரு நாளும், எனக்கு நேரடியாகச் செய்தி வருவதுபோல் நான் உணர்கிறேன். ஆண்டவர் விரும்புவதைப் போலவே என் வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” (ரியா)