உன் கடந்த கால காயங்கள் ஆறும்படி, நீ குணமடைவாயாக…

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் கடந்த கால காயங்கள் ஆறும்படி, நீ குணமடைவாயாக…

கண்ணுக்குப் புலப்படாமல் மறைவாக நீ அனுபவித்துக்கொண்டிருக்கிற துன்பம் ஆண்டவருக்கு முன்பாக மறைந்திருக்கவில்லை. பழைய காயங்கள் கூட மறக்கப்படவில்லை. அவர் அவைகளை அறிந்திருக்கிறார், அவர் அவைகளைப் பார்க்கிறார், அவைகளிலிருந்து உன்னைக் குணப்படுத்த விரும்புகிறார்.

“அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம்வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்…” (எரேமியா 30:17)

உனக்கு ஆறுதல் அளிப்பதாகவும், உனது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் அவர் உறுதியளிக்கிறார்… “‘என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்…’” (ஏசாயா 40:1-2)

இயேசுவுக்கு, நீ பட்ட கஷ்டங்கள் யாவும் தெரியும்; உன் குழந்தைப் பருவத்தில் என்ன நடந்தது என்பது கூட அவருக்குத் தெரியும். ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அதை உன் மனதிற்குள் ஆழமாகப் புதைக்க நீ எல்லாவற்றையும் செய்திருந்தாலும், உன் பரலோகப் பிதா, உன் இருதயத்தை குணப்படுத்தும் தைலத்தை உன் இருதயத்தின் மீது ஊற்றி, உன் காயங்களை ஆற்றவும் உன்னைக் குணப்படுத்தவும் விரும்புகிறார். இயேசு தாமே உன் இருதயத்தைக் குணமாக்குவார்.

“கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்…” (லூக்கா 4:18)

பயப்பட வேண்டாம்: அவரது கரம் மென்மையானது, அவரது தொடுதல் கனிவானது. அவர் உன்னை ஒருபோதும் காயப்படுத்த மாட்டார். உன் வேதனைக்குக் காரணமான அந்த முள்ளை, சில நேரங்களில் உன்னை அமிழ்த்தும் அந்த கொடிய வலியை, அவர் உன்னிலிருந்து அகற்ற விரும்புகிறார்.

உன் சரித்திரத்தின் முதல் நாள் தொடங்கி இன்று வரை உன்னை முழுமையாக அறிந்தவர் இயேசு ஒருவரே.

அவரை நம்பு. உன்னைக் கவனித்துக்கொள்ளவும், உன்னைக் குணப்படுத்தவும் இவ்வளவு இரக்கமும் முழுத் தகுதியும் உள்ள வேறு எந்த மருத்துவரையும் எனக்குத் தெரியாது. அவர் எனக்கு அதைச் செய்தார், அவர் உனக்கும் அதைச் செய்ய விரும்புகிறார்… நான் அதை உறுதியாக நம்புகிறேன்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!