உன் உணர்ச்சிகளை ஆண்டவரிடமிருந்து மறைக்காதே!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் உணர்ச்சிகளை ஆண்டவரிடமிருந்து மறைக்காதே!

இன்று, மனதின் ஆரோக்கியம் பற்றிய நமது தொடரை நாம் நிறைவு செய்கிறோம். இது உனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்திருக்கும் என்று நான் ஜெபிக்கிறேன்!

வேதாகமத்தில் தாவீது தனது எழுத்துக்களில் மிகவும் வெளிப்படையாக எழுதுகிறார்… அவர் தனது உணர்ச்சிகளை மிகவும் வெளிப்படையாக வெளிப்படுத்தினார்; மேலும் அவர் உண்மையில் எப்படி உணர்கிறார் என்பதை தேவனிடம் சொல்லி, தன் தேவனுக்கு முன்பாக தனது ஆத்துமாவை வெளிப்படுத்திக் காட்ட பயப்படவில்லை. ஒரு நாள் அவர், “கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன். நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதிக்குமோ? அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ? கர்த்தாவே, நீ எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும்’’ என்று அறிவித்தார். (சங்கீதம் 30:7-9)

நீ ஆண்டவரிடத்தில் உண்மையாக இருக்கும்போதும்,​​ நீ யதார்த்தமாக இருக்கும்போதும், ​​நீ உண்மையில் என்ன உணர்கிறாய் என்பதை அவருடன் பகிர்ந்துகொள்ளும்போதும், ஆண்டவர் அதில் பிரியப்படுகிறார்.

உன் வாழ்க்கையில் சில சூழ்நிலைகள் ஏன் தொடர்ந்து நீடிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளதா? நீ காயப்பட்டிருக்கிறாயா? அல்லது பாடு அனுபவித்துக்கொண்டிருக்கிறாயா? எல்லாவற்றையும் அவரிடம் சொல்லிவிடு.

என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுவதாக உணர்கிறாயா? கைவிடப்பட்டதாக உணர்கிறாயா? காட்டிக்கொடுக்கப்பட்டதாக உணர்கிறாயா? உன் இருதயத்தை கர்த்தரிடத்தில் வெளிப்படுத்திக் காட்டு. உன் கண்ணீரையும் அவரிடத்தில் வைத்துவிடு. அவர் உனக்குச் செவிசாய்க்கவும், உனக்கு மீண்டும் வாக்குப்பண்ணவும், உனக்கு ஆறுதல் அளிக்கவும் விரும்புகிறார்.

“பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே” என்ற இந்த இனிமையான பாடலைப் பாடி,​​ எல்லாவற்றையும் இயேசுவிடம் எடுத்துச் செல்லவும், அவரை ஆராதிக்கவும் உன்னை அழைக்கிறேன். https://youtu.be/dUX6CcS34mw?si=wMF8pZY8WynSvJWQ

நீ ஆண்டவரிடம் மனம் திறந்து பேசலாம்… அவரே உன் சிறந்த நண்பர்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “இன்றைய செய்தியானது எனக்காகவே எழுதப்பட்ட ஒன்றாக இருந்தது, நன்றி! நான் ஒரு வருடத்திற்கும் மேலாக கொஞ்சம் கொஞ்சமாக பாவ அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வருகிறேன், அக்டோபர் 13, 2023ல் நான் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்தேன். அந்த நாட்களில் நான் எனக்குள் பல மாற்றங்களைச் செய்துகொண்டேன், மேலும் ஆண்டவரை மீண்டும் என் வாழ்க்கையில் பெற்றிருக்க உதவியையும் தேடினேன். நான் எனது விசுவாசத்தைப் புதுப்பித்து, மது மற்றும் போதைப்பொருளிலிருந்து விடுபட்டு, ஒரு மாற்றமடைந்த மனிதனாக இருக்கிறேன், மேலும் ஜெபத்தின் மூலம் ஆண்டவருடைய உதவியால் நான் சரியான பாதையில் செல்ல முடியும் என்று நம்புகிறேன். நான் ஆரம்பத்தில், ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலை தினமும் வாசிக்காமல் எப்போதாவது வாசித்து வந்தேன், ஆனால் நான் அதை தினமும் வாசிக்க ஆரம்பித்தவுடன், அது எப்போதும் எனக்குத் தேவையானவற்றையும், என்னுடன் தொடர்புடைய விஷயங்களைப் பற்றியும் பேசுவதை உணர்கிறேன். உங்கள் தினசரி செய்திகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இது உங்களுக்குக் கூட தெரியாது; என்னை சரியான பாதையில் நடத்திச் செல்ல உதவுகிறது. நல்ல வார்த்தைகள் தொடர்ந்து வரட்டும், நீங்கள் இருப்பதற்கு நன்றி!” (வெஸ்லி)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!