உன் இருதயம் குணமடைய வேண்டுமா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் இருதயம் குணமடைய வேண்டுமா?

உனக்கு எப்போதாவது வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதா? நீ என்ன செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அதில் கிருமி தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க காயத்தை முழுமையாக கழுவி சுத்தம் செய்வது மிகவும் முக்கியம் என்பதை நீ நிச்சயமாய் அறிவாய்.

நாம் அனைவரும் நம்மை கோபப்படுத்தும் சூழ்நிலைகளை சந்திக்கிறோம். சில நேரங்களில் கத்தியைப்போல வெட்டுகிற அளவுக்கு சூழ்நிலைகள் மிகவும் மோசமானதாக இருக்கலாம். இதனால் நாம் அதிருப்தியும், விரக்தியும் அடைகிறோம். இந்தக் கோபத்தின் வெளிப்பாடாக கொந்தளிக்கிறோம். நம் செயல்களில் அதை வெளிப்படுத்துகிறோம். நாம் என்ன விதைக்கிறோமோ அதுதான் இறுதியில் வளரும் என்பது நமக்குத் தெரியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தக் கோபத்தைத் தணித்து சரிசெய்யாவிட்டால், அது தவிர்க்க முடியாத தொற்றுநோயாக மாறிவிடும்.

சில சமயங்களில் அது வன்முறையாகக் கூட மாறலாம்… அதனால்தான் காயங்களைக் கவனிப்பதும் முன்கூட்டியே கோபத்தைக் கட்டுப்படுத்துவதும் மிகவும் முக்கியமாகும்.

“கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்” என்று வேதாகமம் சொல்கிறது. (வேதாகமத்தில் யோபு 5:2ஐ வாசித்துப் பார்க்கவும்)

என் நண்பனே /தோழியே நீ நிர்மூடனைப்போன்ற ஒரு நபர் அல்ல என்று எனக்குத் தெரியும்!

இச்செய்தி உன்னிடம் பேசிக்கொண்டிருக்குமானால், கிறிஸ்துவே உன் நம்பிக்கை என்பதை அறிந்துகொள்! நீ முற்றிலும் விடுதலையடையும்படிக்கு, முக்கியமாக கோபத்திலிருந்து விடுதலையடையும்படிக்கு அவர் உனக்காக மரித்தார்.

கூடுமானால், என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஏறெடுப்பாயா… “ஆண்டவரே நீர் எனக்குத் தேவை. என் இருதயத்தை கோபத்திலிருந்து குணமாக்கும்; என் எண்ணங்களைத் தூய்மைப்படுத்தும். என் வாழ்க்கையையும் என் ஆத்துமாவையும் கரிசனையோடு கவனித்துக்கொள்வதற்கு நன்றி. என்னை முழுமையாக குணமாக்குவதற்கு நன்றி! உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

நீ மற்றவர்களின் கோபத்திற்கு ஆளாகியிருந்தால், அவர்களுக்காகவும் நீ ஜெபிக்கலாம். ஆண்டவரால் நிச்சயம் அதிசயம் செய்ய முடியும் என்பதை மறவாதே!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!