உன் இருதயமே அவருடைய வாசஸ்தலம்

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் இருதயமே அவருடைய வாசஸ்தலம்

“ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார். தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார். பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.” (சங்கீதம் 104:2-5)

அவர் இருந்தார், அவர் இருக்கிறார், அவர் நித்தியத்திற்கும் இருப்பார். ஆண்டவர் ஒளியை வஸ்திரமாகத் தரித்துக் கொள்கிறார், மேலும் அவரது மாட்சிமையின் பளிங்கரம் பிரபஞ்சத்தை நிரப்புகிறது. கடலும் அலைகளும் அவருடைய மகத்துவத்தை அறிவிக்கின்றன. மலைகள் அவருடைய வல்லமை மற்றும் மகிமையின் சாட்சிகளாய் நிற்கின்றன. அவருக்குள் உன்மீது அளவில்லாத அன்பும்… மற்றும் அளவில்லாத அழகும் வலிமையும் தங்கியிருக்கிறது…

என் அன்பரே, ஆண்டவர் உன்னைச் சூழ்ந்து இருக்கிறார். சூழ்நிலையையோ, மனிதர்களையோ கண்டு பயப்படாதே – ஆண்டவர் இங்கே இருக்கிறார். உன் வாழ்வில் எப்படிப்பட்ட கஷ்டம் நுழைந்திருந்தாலும், பயத்தை நுழைய விடாதே. உன் இதயம் பயம் மற்றும் அழுத்தத்திற்கான வீடு இல்லை, உன் இதயம் சந்தேகம் மற்றும் நடுக்கத்திற்கான இருப்பிடம் இல்லை. உங்கள் இதயம் பரிசுத்த ஆவியானவர் வாசமாய் இருக்க பாக்கியம் பெற்ற வாசஸ்தலமாகும்! தேவனுடைய ஆவியானவர் உனக்குள் குடியிருப்பதைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

நீ கிறிஸ்துவுக்குள் யார் என்பதை நினைவூட்டும் இந்த வல்லமையான வசனத்தை இன்று சில நொடிகள் தியானி: “அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.” (1 கொரிந்தியர் 6:17)

நீ பலசாலி, தைரியசாலி, அசைக்கமுடியாத ஒருவர், மட்டுமின்றி தெய்வீக, இயற்கைக்கு அப்பாற்பட்ட சமாதானத்தினால் நிரப்பப்பட்ட ஒருவர்.

ஆண்டவர் உன் இதயத்தை அவருடைய வாசஸ்தலமாக மாற்றிக்கொள்கிறார்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!