உன் இருதயமாகிய நிலத்தை கவனித்துக் காத்துக்கொள்…

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் இருதயமாகிய நிலத்தை கவனித்துக் காத்துக்கொள்…

ஒரு செடி வளர்ந்து, செழித்து பூத்துக்குலுங்கும்படிக்கு அதை செழிப்பாக வைத்திருப்பது எப்போதும் அவ்வளவு எளிதானது அல்ல என்று நான் நினைக்கிறேன்.

குறிப்பாக, ஒரு செடி வளர இவைகள் தேவைப்படும்: நல்ல மண், அதாவது, தாவரத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மண் தேவை. எல்லா வகையான மண்ணும் ஒரு செடியை செழிப்பாய் வளர வைத்துவிட முடியாது என்பது உனக்கு ஏற்கனவே தெரியும் என்று நான் நினைக்கிறேன்!

தன் பணியை நிறைவேற்றி, செடிக்கு ஒரு “தூண்டுதலாக” இருக்க, மண்ணில் போதுமான அளவு ஈரப்பதத்தை பராமரிக்கவும், அதே நேரத்தில் தாவரத்தின் வேர்களில் நன்கு காற்றோட்டத்தை அனுமதித்து, வேர்களை சுவாசிக்கச் செய்யவும் மண்ணில் சிறந்த நீர் தக்கவைப்புத் திறன் இருக்க வேண்டும். அதோடு கூட, மண்ணானது நீர் உறிஞ்சும் கூறுகள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

உன் இருதயமே உனது மண்! அதைக் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்!

  • உனது உள்ளான மனிதனைப் புத்துணர்ச்சியடையச் செய்து, உன் புறம்பான மனிதனில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆண்டவரின் வார்த்தையால் உன் இருதயத்தின் மண்ணைத் தவறாமல் நீர்ப்பாசனம் செய்வதன் மூலம் அதை ஈரப்பதத்துடன் வைத்திரு! ஏனென்றால், இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று தேவனுடைய வார்த்தை நமக்குச் சொல்கிறது. (மத்தேயு 12:34)
  • ஜெபத்தினால் உன் இருதயத்தின் மண்ணை எப்போதும் காற்றோட்டம் உள்ள மண்ணாக வைத்திரு. உன் அன்றாட வாழ்க்கையில் ஆண்டவருடனான உன் நேர்மையான உரையாடல்களானது புதிய காற்றை ஆழமாக சுவாசிப்பதைப்போல இருக்கும். நீ ஜெபிக்கும்போது, உன் வார்த்தைகள் நேர்மையானதாகவும், உண்மையானதாகவும், முடிந்தவரை வெளிப்படையானதாகவும் இருக்கட்டும்; மேலும் அவர் உனக்குச் சொல்ல விரும்பும் அனைத்தையும் கேட்கும்படி உன் செவிகள் எப்போதும் திறந்திருக்கட்டும்.

உன் இருதயத்தைக் கவனித்துக்கொள். “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவவூற்று புறப்படும்” என்று வேதாகமம் நமக்குச் சொல்வதுபோல், உன் இருதயத்திலிருந்துதான் ஜீவன் வருகிறது. (நீதிமொழிகள் 4:23)

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “என் வாழ்வில் உங்கள் செய்திகளின் தாக்கத்தையும் ஏற்ற சமயத்ததில் ஏற்ற வார்த்தைகளைப் பெறுவதையும் எப்படி விவரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. இது நிச்சயமாகவே தெய்வீக ஏற்பாடாகத்தான் இருக்க வேண்டும். இன்று காலை நான் பிலிப்பியர் 3:10-14ஐ தியானித்தேன்; அது விடாமுயற்சியுடன் பந்தயத்தில் ஓட வேண்டும், கைவிடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி, சமீபத்தில் நான் போராடிக்கொண்டிருந்த சில ஏமாற்றமான தருணங்களை மேற்கொள்ளும்படி என்னை ஊக்கப்படுத்தியது; பிறகு உங்களது ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலை இப்போதுதான் வாசித்தேன், விடாமுயற்சியுடன் ஓட்டப் பந்தயத்தில் ஓடும் அதே விஷயத்தைப் பற்றித்தான் அது என்னை ஊக்குவித்தது. என் ‘ரேமா’ வார்த்தையை அது உறுதிப்படுத்துகிறது. பரிசுத்த ஆவியானவரின் சத்தத்திற்குச் செவிசாய்த்து, கீழ்ப்படிந்து, தினமும் இந்த வார்த்தைகளை எனக்கு அனுப்புவதற்காக நன்றி. எல்லா நாட்களிலும் நீங்கள் யாரிடமாவது / பல மக்களிடம் அவர்களது பிரச்சனைகளைப் பற்றி அவர்களிடம் நேரடியாகப் பேசுவது என்பது உண்மையில் தினமும் ஒரு அதிசயம்தான். கர்த்தர் தாமே உங்களைத் தொடர்ந்து ஆசீர்வதித்து, நீங்கள் அநேகரின் வாழ்வைத் தொடும்படி பரிசுத்த ஆவியால் நிரப்புவாராக.” (நபிலா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!