உன் ஆற்றலை குன்றச் செய்வது எது?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் ஆற்றலை குன்றச் செய்வது எது?

என் தோழி ஒருத்தி, அவளது தோட்டத்தில் அற்புதமான ஒரு மரத்தை வைத்திருக்கிறாள். ஒருசமயம், அது வாடி வதங்கத் துவங்கியது என்பதை அவள் மூலம் நான் அறிந்துகொண்டேன். உண்மையில் நடந்தது என்னவென்றால், புல்லுருவி மரத்தின் கிளைகளில் பதிந்து, அதன் சாற்றை உறிஞ்சி, அதன் ஆற்றல் அனைத்தையும் உறிஞ்சி எடுத்துவிட்டது. இந்த ஒட்டுண்ணியால் மரம் நலிந்து வலுவிழந்து போயிற்று.

நம் வாழ்விலும் இதுபோன்ற “புல்லுருவிகள்” இருக்கலாம்: மனஅழுத்தம் மற்றும் சோதனைகள் போன்றவை நம் ஆற்றலை, நமது வலிமையைத் திருடுகின்றன.

உதாரணமாக, அது நம்மால் கடந்து செல்ல முடியாத துன்பமாகவோ அல்லது துக்கமாகவோ இருக்கலாம்; அது மன்னிக்க முடியாத ஒரு பிரச்சனையாக இருக்கலாம்; அது முற்றி வரும் ஒரு நோயாகவோ, குற்ற உணர்வாகவோ அல்லது பயமாகவோ இருக்கலாம். இந்த வகையான “ஒட்டுண்ணிகளுக்கு” மத்தியில், ஆண்டவர் உன்னிடம் கூறுகிறார்:

“அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும்.” (ஏசாயா 30:15)

இந்தத் தருணங்களில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சமாதானத்துடன் வாழ்வது சாத்தியமே… உண்மையில் அப்படி வாழ முடியும்.

ஆனால், அது எப்படி சாத்தியம் என்று நீ கேட்கலாம்? ஒரு நபருக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்தால், அவரால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? அடுத்த வாரம் உன் பிள்ளைகளை எப்படி போஷிப்பாய் என்று தெரியாத நிலையில், உன்னால் எப்படி சமாதானமாக இருக்க முடியும்? (உன் பிரச்சனையை இங்கே சொல்லவும்) இந்த நிலையில் நீ எப்படி சமாதானத்துடன் இருப்பாய்?

ஆண்டவரால் மட்டுமே உனக்கு இந்த சமாதானத்தை வழங்க முடியும்; மேலும் அவர் உனக்கு சமாதானத்தை தர விரும்புகிறார் என்பதுதான் நற்செய்தி!

எல்லாவற்றிற்கும் மேலாக, எதிர்மறையான எண்ணங்களால் உன் மனதை நிரப்ப வேண்டாம். மாறாக, உன் விசுவாசத்தை ஊக்குவிக்கும் விஷயங்களைக் கேட்பதைத் தேர்ந்தெடு. ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலை வாசிப்பதன் மூலம் நீ ஏற்கனவே இதைச் செய்து வருகிறாய்; அதோடு கூட நீ ஆராதனைப் பாடல்களைக் கேட்கலாம் அல்லது வேத வசனத்தை தியானிக்கலாம்.

இன்று, ஆண்டவருடைய சமாதானத்தைப் பெற்றுக்கொள். அவரை விசுவாசி. உனக்கு உறுதியளிக்கும் மற்றும் ஆறுதல் அளிக்கும் அவருடைய மென்மையான குரலுக்கு சமீபமாய் நெருங்கி வா. அவர் மீது நம்பிக்கை வை.

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் செய்தியிலிருந்து எனக்கு வரும் மின்னஞ்சல்கள் பிரத்யேகமாக எனக்காகவும் எனது தற்போதைய சூழ்நிலைக்காகவும் இருப்பதாகவே உணர்கிறேன். ஆண்டவர் தம்முடைய ராஜ்யத்தைக் கட்ட என்னையும் பயன்படுத்துகிறார் என்று நான் நம்புகிறேன். என் விசுவாசம் பெருகி வருகிறது; ஆண்டவரின் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் நான் உணர்கிறேன்.” (நான்சி, ஏற்காடு)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!