உன் ஆராதனையின் சுகந்த வாசனை எழும்பட்டும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் ஆராதனையின் சுகந்த வாசனை எழும்பட்டும்!

துதிப் பாடல்களைக் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும். திறமையான, அபிஷேகம் பெற்ற தேவனுடைய பாடல் கலைஞர்கள் அனைவருக்காகவும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். பல இசையமைப்பாளர்கள் ஆண்டவருடைய மகிமைக்காக ஆச்சரியப்படத்தக்க அழகான பாடல்களை எழுதியுள்ளனர், இந்தப் பாடல்களுடன் இணைந்து அவரை ஆராதிப்பது மிகவும் நல்லது!

இருப்பினும், நீ சொந்தமாக உன்னுடைய தனிப்பட்ட விதத்தில், தனித்துவமான வழியில் தேவனிடம் கொண்டுவரும் வார்த்தைகளுக்கு ஈடு எதுவும் கிடையாது. உன் துதியின் சுகந்த வாசனையை எதுவும் மாற்ற முடியாது! பிதாவின் இருதயம் உன் குரலை, உன் இருதயத்திலிருந்து எழுகிற பாடலைக் கேட்க ஏங்குகிறது.

இன்று காலை, பரலோகம் உன் சத்தத்திற்குச் செவிசாய்த்துக்கொண்டிருக்கிறது. உன் இருதயத்திலிருந்து நேரடியாக எழும் ஒரு புதிய பாடலுக்காக பரலோகம் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறது. வேதாகமம் நம்மை பின்வருமாறு ஊக்குவிக்கிறது…

“நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும். சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.” (வேதாகமத்தில் சங்கீதம் 33:1-3ஐப் பார்க்கவும்)

இன்று, ஒரு புதிய பாடலை, ஒரு புதிய மெல்லிசையை இங்கே இப்போதே கொண்டு வா! உன் ஆராதனையின் சுகந்த வாசனையை கர்த்தருடைய பாதத்தில் ஊற்று.

இன்று உன் ஆராதனையின் சுகந்த வாசனை வீசட்டும்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!