உன் ஆத்துமா இன்று எப்படி இருக்கிறது?
முகப்பு ›› அற்புதங்கள் ››
இன்று, மனதின் ஆரோக்கியம் பற்றிய தொடரை தியானிக்கத் தொடங்கலாம். இந்த வாரம், ஆண்டவர் உன் வாழ்க்கையில் ஆழமாகக் கிரியை செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தருடைய அன்பினால் நான் உன்னை நேசிக்கிறேன்!
நீயும் நானும் மனிதர்களாகத்தான் இருக்கிறோம். எனவே இந்தப் பூமியில் வாழும் வரை ஒவ்வொரு மனிதனும் சகிக்க வேண்டியவற்றை, குறிப்பாக சோர்வை நாம் தொடர்ந்து சந்திக்கிறோம்! நிச்சயமாக, இந்தச் சோர்வு ஒருவேளை உடல் ரீதியாக இருக்கலாம், அதே நேரம் அது மன ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ கூட இருக்கலாம்.
இந்த நேரத்தில் உன் ஆத்துமா எப்படி இருக்கிறது? எப்பொழுதும் அதே சிரமங்களை எதிர்கொள்வதால், வானத்தின் விளிம்பில் கூட வெற்றியை ஒருபோதும் பார்க்க முடியாமல் போரிட்டு நீ சோர்ந்துபோகிறாயா?
அப்படியானால், இந்த வாக்குத்தத்தம் உனக்கானது. “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.” (ஏசாயா 40:29)
இதோ உனக்கான ஒரு நல்ல செய்தி… உன் பெலனைப் பெருகச் செய்வதாக ஆண்டவர் உனக்கு வாக்குப்பண்ணுகிறார், உனது சரீரத்தின் பெலனையும் மனதின் வலிமையையும் அவர் பெருகப்பண்ணுவதாக வாக்களிக்கிறார்.
ஆம், ஆண்டவரால் உனக்குள் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய முடியும் மற்றும் உன் சோர்ந்துபோன ஆத்துமாவிற்கு பெலனை மீட்டெடுத்துக் கொடுக்கவும் முடியும்.
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “உங்கள் கடிதங்கள் எனக்கு ஆசீர்வாதமாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருந்து வருகின்றன, மிக்க நன்றி. குறிப்பாக, இன்று வந்த செய்தியானது மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனென்றால் நான் வேலைக்குச் செல்லும் வழியில் ஆண்டவரிடம் பேசி, அவருடைய உதவியின்றி நான் எவ்வளவு பலவீனமாக இருக்கிறேன் என்று என் நிலையைச் சொல்லி அறிக்கையிட்டுக்கொண்டிருந்தேன், பிறகு இந்த மின்னஞ்சலைத் திறந்து பார்த்தபொழுது, அவர் எனது ஜெபங்களைக் கேட்கிறார் என்பதை அது உறுதிப்படுத்தியது. மேலும் அவருடைய பிரசன்னத்தை எனக்கு மிகவும் அருகில் உணர்கிறேன். உங்கள் ஊழியத்திற்கு மீண்டும் நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.” (மோனிகா, வயநாடு)