உன் ஆசீர்வாதம்… “உன்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது”!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் ஆசீர்வாதம்… “உன்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது”!

ஊழிய பணிகளுக்காக நான் அடிக்கடி புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும், நான் அவைகளைப் பயன்படுத்துவதை விரும்புகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். 🙂 அவை நிச்சயமாகவே எனக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது!

இருப்பினும், நான் ஏதாவது சாப்ட்வேரையோ (software) அல்லது ஆடியோவையோ பதிவிறக்கம் செய்ய வேண்டும்போது, சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்…

சில நேரங்களில், இணைய இணைப்பின் வேகம் மிகக் குறைவாக இருப்பதால், பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். எனது கோப்பு (file) பதிவிறக்கம் செய்யத் தயாராக இருந்தாலும்கூட, அது உடனடியாக பதிவிறக்கமாகாது.

என் நண்பனே/தோழியே, இது ஒருவேளை உன் வாழ்வில் இருக்கும் சூழலைப்போல தோன்றுகிறதா?
தேவன் ஏற்கனவே உன் வாழ்வில் ஆசீர்வாதங்களை அனுப்பியிருந்தாலும், ஒருவேளை, அவற்றின் பலன்களை நீ இன்னும் உணராதிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக சமாதானம், அதிக விசுவாசம் அல்லது அதிக வெற்றியைக் கேட்டு ஜெபித்தும்கூட, அது இன்னும் கிடைக்கவில்லையா?

பொறுமையாக இரு, ஏனெனில் அது நிச்சயம் வரும்! அது “இறங்கி வந்துகொண்டிருக்கிறது.” ஜெபத்திற்கும் ஜெபத்திற்குக் கிடைக்கும் பதிலுக்கும் இடையே உள்ள நேரம் குறைவானதாகவோ அல்லது நீண்டதாகவோ இருக்கலாம், ஆனால் தேவன் உன் ஜெபத்தைக் கேட்டிருக்கிறார் என்பதை உறுதியாக நம்பு. அவர் உன்னைப் பார்த்துவிட்டார், உன் சத்தத்தைக் கேட்டுவிட்டார், உனக்குப் பதிலளித்துவிட்டார் என்று உறுதியாய் சொல்லும் அளவிற்கு நான் அதை நன்கு அறிவேன்!

விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், காத்திருப்பிலும் உறுதியாய் இரு… ஏனெனில், ஏசாயா 30:15ல், “நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும்” என்று கர்த்தர் சொல்லுகிறார், குழப்பம் அல்ல… சமாதானம் உண்டு. சந்தேகம் அல்ல… நம்பிக்கை உனக்கு நிச்சயம் உண்டு!

காத்திருக்க வேண்டிய இந்தக் காலகட்டத்தை, இந்தப் “பதிவிறக்க” நேரத்தை, விசுவாசம், அமைதி மற்றும் நம்பிக்கையுடன் கடந்து செல். தேவன் ஏற்கனவே கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்று நம்பு!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!