உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்

“உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று தங்கள் பெற்றோர்கள் சொன்னதைப் பலரும் கேட்டதே இல்லை. மாறாக, “நீ ஒன்றுக்கும் உதவாதவன்/ உதவாதவள்” அல்லது “நீ எதற்கும் பிரயோஜனமற்றவன் / பிரயோஜனமற்றவள்” என்பன போன்ற மட்டுப்படுத்தும் வார்த்தைகளை மட்டுமே கேட்டு வளர்ந்திருக்கின்றனர்.
இந்த எதிர்மறையான வார்த்தைகள், அவர்களது மனதில் தோல்விக்கான விதைகளாக மாறிவிடுகிறது. அவர்கள் குற்ற உணர்வையும், குறைபாடு மற்றும் தோல்வி குறித்த பயத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்கள்.
இன்று, பரிசுத்த ஆவியானவர் உன் வாழ்வில் விதைக்கப்பட்ட அந்த மரணத்திற்கு ஏதுவான வார்த்தைகளை வேரோடு பிடுங்கி, ஜீவனுக்கு ஏதுவான வார்த்தைகளால் உன்னை நிரப்பிக்கொண்டிருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

ஏசாயா 54:17 இல்

ஆண்டவர் உன்னைப் பார்த்து அறிவிக்கிறார், “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.”

உன் வாழ்க்கையில் உன்னைக் குற்றப்படுத்தும் விதையை யாரேனும் உன்னில் விதைத்திருந்தால் – அவர்கள் செய்தது தவறு என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. எந்த ஆயுதமும், அதாவது உனக்கு எதிரான வாய்மொழி வார்த்தையோ அல்லது நடத்தையோ வாய்க்காதேபோம். உன் பிதாவாகிய தேவன் உன்னை நேசிக்கிறார், அவரால் நீ பெரிய காரியங்களைச் செய்வாய் என்று உனக்குச் சொல்ல விரும்புகிறார். அவர் அவைகளை முன்னதாகவே பார்க்கிறார். நீ வெற்றியடைவாய் என்று அவருக்குத் தெரியும், அவர் உன்னைப் பார்த்து … “என் சிநேகிதனே/சிநேகிதியே, நான் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்!” என்று சொல்கிறார்.

நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபிப்போம்: “கர்த்தாவே, என்னை நினைத்துப் பெருமைப்படுவதற்காகவும், என் வாழ்க்கையில் குற்றச்சாட்டுகள் எனும் விதையை விதைத்தவர்கள் செய்தது தவறு என்பதை எனக்குச் சுட்டிக் காட்டியதற்காகவும் உமக்கு நன்றி. நான் வெற்றிபெறப் போவதால் உமக்கு நன்றி! உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!