உன்னை உற்சாகமூட்டுபவர் யார்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன்னை உற்சாகமூட்டுபவர் யார்?

ஆங்கிலத்தில் “சியர்லீடர்” (உற்சாகமூட்டுபவர்) என்ற வார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும்…

உற்சாகமூட்டுபவர்களைப் பற்றி நினைக்கும்போது, ​​​​விளையாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கான நேயர்கள் தங்கள் விளையாட்டு அணியை மகிழ்ச்சியுடன் ஆதரிப்பதை நாம் கற்பனை செய்கிறோம். அப்படி இல்லையென்றால், ஒரு மனுஷன் தனக்குப் பிடித்த சைக்கிள் ஓட்டும் வீரனுடன் சேர்ந்து ஓடி, தனது இறுதிக் கோட்டை நோக்கி அவன் செல்லும்படி உற்சாகப்படுத்தும் நபரை நினைத்துப் பார்க்கிறோம்.

நம் வாழ்விலும் கூட மறைவிலிருந்து நம்மை உற்சாகப்படுத்தும் ஒரு சியர்லீடர், அதாவது ஒரு ஊக்குவிப்பாளர் நமக்கும் அடிக்கடி தேவைதான்.

தேவன் உன்னை உற்சாகப்படுத்துபவராய் இருக்கிறார்! உன்னை எப்படி ஊக்கப்படுத்துவது என்பது அவரை விட நன்றாக வேறு யாருக்குத் தெரியும்?

எனவே, இன்று ஓருவேளை, எல்லைக்கோடு இன்னும் தொலைவில் இருப்பதாக நீ உணர்ந்தால், அதை எப்படி சென்றடையப் போகிறாய் என்பது உனக்கு தெரியாமல் இருந்தால், இயேசு உன்னோடு கூட ஓடிவருவதைக் கற்பனை செய்து பார்! அவர் அனைத்து வலிமையையும் நம்பிக்கையையும் ஒன்றாகத் திரட்டி, அதை உனக்கு அளிக்க உன்னுடன் வருகிறார் என்பதைக் கற்பனை செய்து பார்.

“தொடர்ந்து முன்னேறிச் செல்!! நீ கிட்டத்தட்ட எல்லைக் கோட்டை நெருங்கி வந்துவிட்டாய்! தொடர்ந்து முன்னேறிச் செல்… நீ சாதிக்கப் போகிறாய்! நான் உன்னுடன் இருக்கிறேன்! நாம் ஒன்றாக இணைந்து அதை சாதிக்கப்போகிறோம்! நிம்மதிப் பெரு மூச்சு விடு… நீ ஜெயித்துவிட்டாய்! பலத்துடன் ஓடு… உன்னால் முடியும்!!”

இயேசு மட்டுமே உனக்கு மிகச்சிறந்த உற்சாகமூட்டுபவராய் இருக்கிறார், நண்பனே/தோழியே! இன்று அவருடைய ஜீவனுள்ள வார்த்தைகளைத் தவறவிடாதே!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!