உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உன்னால் நன்மை செய்ய இயலும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உன்னால் நன்மை செய்ய இயலும்!

உன் சூழ்நிலை என்ன, நீ எங்கு வேலை செய்கிறாய், என்ன வேலை செய்கிறாய் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்… நீ இருக்கும் இடத்திலேயே, உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உன்னால் நன்மை செய்ய முடியும்!

எல்லாம் சொல்லி முடிந்த பின்பும், இயேசு மக்களை நேசிப்பதற்கு கடினமான எதையும் செய்யவில்லை… தம்மைப் பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தும்படி அனுமதித்தார் மற்றும் ஜனங்களின் தேவைகளுக்கேற்ப பதிலளித்தார்.

அவர்களுக்கு மன்னிப்பை அருளினார் (வேதாகமத்தில் லூக்கா 7:48 ஐப் பார்க்கவும்)

அவர்களை குணப்படுத்தினார் (வேதாகமத்தில் லூக்கா 14:4ஐப் பார்க்கவும்)

மற்றும்/அல்லது அவர்களிடத்தில் ஆறுதலான வார்த்தைகளைப் பேசினார்.(வேதாகமத்தில் லூக்கா 10:41-42 ஐப் பார்க்கவும்).

நீயும் அப்படிச் செய்ய வேண்டும்! நீ உனக்குள் இருக்கிற ஆண்டவராலும் அவருடைய அன்பினாலும் வழிநடத்தப்படவும் உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நன்மை செய்யவும் உன்னை ஒப்புக்கொடுக்கலாம்.
எவ்வாறு ஒப்புக்கொடுப்பது…

  • உன்னிடம் பேசுபவர்களுக்கு செவி கொடுப்பதன் மூலம்,
  • ஊக்கமளிக்கும் வார்த்தையைக் கூறுவதன் மூலம்,
  • “அனுதினமும் ஒரு அதிசயம்” என்ற இந்த மின்னஞ்சலைப் பகிர்வதன் மூலம்
  • அல்லது மனதளவில் சோர்வடைந்திருப்பதாகக் காணப்படும் ஒரு நபரைப் பார்த்து ஒரு புன்னகை செய்வதன் மூலம்!

இந்தச் “சின்னச் சின்ன விஷயங்கள்” அனைத்தும் ஒருவரது வாழ்வில் மிகப்பெரிய விஷயங்களைச் செய்ய முடியும்.

ஆம், உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உன்னால் நன்மை செய்ய முடியும்! நாம் ஒன்றாக இணைந்து, நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் ஆண்டவர் நேசிக்கிறார் என்பதை அவர்களுக்குக் காட்டுவோம்!

இந்த நாள் ஆசீர்வாதமான நாளாகவும் பிறரை ஆசீர்வதிக்கும் நாளாகவும் அமைவதாக!

சாட்சி: “தினமும் எனது செய்தி எனக்குக் கிடைப்பதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இது நான் தேவனுடன் நெருக்கமாக இருப்பதை உணரச் செய்கிறது மற்றும் நான் மனச்சோர்வடைந்திருக்கும் நாட்களில், வெளியே சென்று மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் காரியத்தைச் செய்ய எனக்கு பலத்தைத் தருகிறது. (ஜூனியா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!