உன்னுடன் நடக்கும் அந்த ஒருவர் யார்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன்னுடன் நடக்கும் அந்த ஒருவர் யார்?

கிறிஸ்துவுடனான வாழ்க்கை சந்தேகத்திற்கு இடமின்றி, அமைதி, மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கு ஒத்ததாக இருந்தாலும், அது இந்த விஷயங்களை மட்டும் உள்ளடக்கியது அல்ல. சண்டைகள், போராட்டங்கள், சோதனைகள் மற்றும் தாக்குதல்களும் உண்டு.

இருப்பினும், பகலோ இரவோ எந்த நேரமாக இருந்தாலும் இயேசு தொடர்ந்து உன் பக்கத்தில் நிற்கிறார் என்ற உறுதி ஆண்டவரின் பிள்ளையாகிய உனக்கு உள்ளது.

“நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.” (லேவியராகமம் 26:12)

சிறந்த பாதுகாவலர், சிறந்த ஆலோசகர், பராக்கிரமசாலிகளின் பராக்கிரமசாலி உன்னுடன் நடக்கிறார்!

இயேசு உன்னோடு இருப்பதால்…

  • புயலின் மத்தியில் உன் இதயம் இயற்கைக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சியால் நிரம்பி வழியும்.
  • பெரும் கொந்தளிப்பின் மத்தியிலும் உன் ஆத்துமா சமாதானத்துடன் இருக்கும்.
  • உன் வாழ்க்கை இடையூரின் காற்றால் அசைக்கப்படுவதில்லை.

ஆண்டவரின் வழியில் விடாமுயற்சியுடன் தொடர்ந்து நட, முன்னே செல். அவர் உண்மையுள்ளவர், அவரே உன்னுடன் நடக்கிறார்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!