உன்னிடம் வல்லமையும் பலமும் உண்டு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன்னிடம் வல்லமையும் பலமும் உண்டு!

“உன் தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார், தேவனே, நீர் எங்கள்நிமித்தம் உண்டுபண்ணினதைத் திடப்படுத்தும்.” (வேதாகமத்தில் சங்கீதம் 68:28 ஐப் பார்க்கவும்)

உன் தேவன் நீ வல்லமையும் பலமும் உள்ளவராக இருக்கும்படி உனக்குக் கட்டளையிடுகிறார்.
உன்னால் என்ன செய்ய முடியும், எவ்வளவு சகித்துக்கொள்ள முடியும் அல்லது எவ்வளவு தாங்கிக்கொள்ள முடியும் என்பது கேள்வி அல்ல.

மாறாக, ஆண்டவர் உன்னிலும் உன் வாழ்க்கையிலும் என்ன செய்துகொண்டிருக்கிறார், அவருடைய பலம் உன் முழு வாழ்க்கையிலும் பாய்கிறதா என்பதுதான் கேள்வி.

இது வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவருடைய வல்லமையாக இருக்கிறது, அது உன் வாழ்க்கையில் ஒரு விதை போல விதைக்கப்பட்டு, எல்லா புரிதலையும்விட மேலான கனிகளை உருவாக்குகிறது!

அவர் என்ன சொல்கிறாரோ, அதையே அவர் நிறைவேற்றுகிறார்… “இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை, கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.” (வேதாகமத்தில் ஏசாயா 59:1 ஐப் பார்க்கவும்)

இயேசு எழும்புகிறார்! அவர் உனக்காக யுத்தத்தை நடத்துகிறார், மேலும் அவர் உன்னிடம் வல்லமையுடனும் பலத்துடனும் இரு என்று சொல்லுகிறார். வல்லமையுடனும் பலத்துடனும் இரு என்று சொல்லி — உனக்குத்தான் கர்த்தர் கட்டளையிடுகிறார்!

உன்னை ஒடுக்கும் இந்த சூழ்நிலையின் மத்தியில் பலத்துடனும் தைரியத்துடனும் எழுந்து கிறிஸ்துவில் ஜெயம் பெறு!

என்னுடன் சேர்ந்து ஜெபி: “ஆண்டவரே, வல்லமையும் பலமும் உள்ளவராக இருக்கும்படி நீர் எனக்குக் கட்டளையிடுகிறீர். நீர் சொல்கிறபடி நான் இருக்கிறேன்! அது எனக்கு என்ன திறமை இருக்கிறது என்பதைப் பொருத்தது அல்ல… அது என்னில் உள்ளும் புறமும் நீர் கிரியை செய்வதைப் பொருத்ததாகும்! உமக்கு விருப்பமானதைச் செய்வதற்கான விருப்பத்தையும் வல்லமையையும் எனக்குக் கொடுத்து, நீர் என்னில் கிரியை செய்கிறீர் என்பதை நான் அறிவேன் (பிலிப்பியர் 2:13). நன்றி! இயேசுவின் நாமத்தில், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!