இப்போது நம்மால் செய்யக் கூடியதெல்லாம் ஜெபம் மட்டுமே…

முகப்பு ›› அற்புதங்கள் ›› இப்போது நம்மால் செய்யக் கூடியதெல்லாம் ஜெபம் மட்டுமே…

“இப்போது நாம் கொண்டிருக்க வேண்டியதெல்லாம் நம்பிக்கை மட்டுமே…” என்ற இந்த சொற்றொடரை இதற்கு முன்பு நீ கேள்விப்பட்டிருக்கிறாயா? இது ஒரு சூழ்நிலையை விவரிக்கிறது, மனுஷீகப் பிரகாரமாய் கூறினால், இதற்கு மேல் எதுவும் சாத்தியமில்லை… ஒரு அதிசயத்தை மட்டுமே நம்பி எதிர்பார்த்திருக்க முடியும் என்பதுதான் இதன் அர்த்தம்.

“இப்போது நாம் செய்யவேண்டியதெல்லாம் ஜெபம் மட்டுமே. நமக்கு ஒரு அதிசயம் நடக்க வேண்டும்!” என்பதைப் போன்று ஜனங்கள் கூறுவதை நீ பெரும்பாலும் கேட்டிருக்கலாம். இது மனித சக்தியால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்பதுபோன்ற இன்னொரு சூழ்நிலையாகும்.

இருப்பினும், இதில் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், செயலற்ற நம்பிக்கையை மட்டும் நாம் கொண்டிராமல் ஜெபிக்க வேண்டும்! ஜெபம் என்பது செயலில் இறங்குவதாகும். நாம் ஜெபிக்கும்போது,​ குறிப்பிடத்தக்க வகையில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்கிறது. நாம் அதற்குப்பின் பொதுவாக ஒரு நம்பிக்கையைக் கொண்டிருப்பதில்லை – நாம் ஆண்டவரை நம்புகிறோம், ஆண்டவரை நம்புகிறவர்கள் அனைவரும் அற்புதங்களை அனுபவிப்பார்கள்.

“… ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” (1 தீமோத்தேயு 4:10).

வேதாகமத்தில் நீ ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கும் இன்னொரு வசனம் உள்ளது, ஆனால் இன்று, நீ அதை முற்றிலும் புதிய வழியில் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

அந்த வசனம் இவ்வாறு கூறுகிறது:
“ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.” (மாற்கு 11:24)

நீ ஜெபித்த பிறகு, உன் நம்பிக்கை முடிவடைந்து விடாது. நீ நம்பிக்கையுடன் ஒரு ஜெபத்தை ஏறெடுத்த பிறகு, ஏதாவது நடக்கும் என்று நீ விசுவாசிக்கிறாய் என்று இந்த வசனம் சொல்கிறது. எத்தனை ஆச்சரியம்!

உன் அதிசயத்திற்காக ஜெபிப்பதை எப்போது நிறுத்தினாய்? நாம் ஜெபிக்கும்போது புதிதாக அற்புதங்கள் நடக்கும் என்பதை தயவுசெய்து புரிந்துகொண்டு விசுவாசத்துடன் ஜெபி! “இப்போது நீ செய்யக் கூடியதெல்லாம் ஜெபம் மட்டுமே” என்று உன் சூழ்நிலைகள் கூறுவதால் ஜெபிக்காதே. ரோமர் 5:5 கூறுவதுபோல் தேவன் உன் நம்பிக்கையை வெட்கப்பட்டுப்போக விடமாட்டார் என்று உனக்குத் தெரியும் என்பதால் நீ ஜெபிக்கிறாய்: “அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது…” (ரோமர் 5:5).

இன்று நான் உன்னுடன் மற்றொரு உதவிக்குறிப்பைப் பகிர்ந்துகொள்ளட்டுமா? உன் தற்போதைய சூழ்நிலையிலிருந்து ஜெபத்துடன் ஒரு படி பின்வாங்கு, ஏனென்றால் அதுவும் கூட 100% ஆண்டவரின் கரங்களில் உள்ளது!

நம்பு – ஜெபி – விசுவாசி!

நீ ஒரு அதிசயம்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!