உன்னால் சரித்திரத்தையே மாற்ற முடியும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன்னால் சரித்திரத்தையே மாற்ற முடியும்!

வேதாகமத்தில், தங்கள் உலகத்தை மாற்றியமைத்துக்கொண்ட மக்களைப் பற்றி நாம் வாசிக்கிறோம். ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்ந்த கலாச்சாரங்கள் மற்றும் சூழல்கள் பொதுவாக சாதகமானதாக இல்லாமல் இருந்த வேளைகளில், அவரவர் தங்கள் சூழ்நிலைக்கேற்ப ஒரு தனித்துவமான, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர்.

யோசேப்பு எகிப்தின் பிரதமர் ஆனார், ஆனால் அவர் ஒரு எகிப்தியனாகக் கூட இருக்கவில்லை. தானியேல் ஒரு அதிகாரியாகவும் நிர்வாகியாகவும் ஆனார், பாபிலோனிய ராஜாவின் அரண்மணையில் அவரது ஞானத்தினால் நன்கு அறியப்பட்டவரும், மிகவும் மதிப்பு மிகுந்தவருமாய் இருந்தார். அங்கு அவர் அந்நிய தேசத்தைச் சேர்ந்தவராய் இருந்தார். ஒரு சாதாரண யூதப் பெண்ணான எஸ்தர், தன் மக்கள் சிறைபிடிக்கப்பட்டுச் சென்ற நாட்டிற்கே ராணியாக மாறினாள்.

பாஸ்டர். பில் ஜான்சனின் இந்த மேற்கோளை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். “தேவ ராஜ்யமானது நமது சபை வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால், நம்மைச் சுற்றியுள்ள உலக கலாச்சாரங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஆண்டவர் நமக்கு அதிகாரம் அளிப்பார் என்று நாம் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசுவின் சீஷராக, ஆண்டவரை உன் சொந்த வாழ்க்கையில் அதிகாரம் செலுத்த அனுமதிப்பதே உன் வேலையாகும், அதன் மூலம் உன் சூழலில், உன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது உன்னால் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்! ஆனால் இது உன் வாழ்வில் நடைபெறுவது, பரிசுத்த ஆவியானவரின் கிரியையால் மட்டுமே சாத்தியமாகும். இது அவருடைய கிருபையால் நம் நடைமுறை வாழ்வில் கிடைக்கும் ஒரு கனியாகும்.

எஸ்தர், தானியேல், யோசேப்பு ஆகியோர் தங்கள் சூழ்நிலைகளை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை. தங்களின் நடத்தை மற்றும் நம்பிக்கையின் மூலம், அவர்கள் சரித்திரத்தின் போக்கையே மாற்றும் அளவிற்கு தங்கள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி, தங்களது சூழலை மாற்றியமைத்துக் கொண்டனர்.

மகிமையின் ராஜா உன்னில் வாழ்கிறார், அநேக ஆத்துமாக்களுக்கு ஜீவனையும், மீட்பையும் மற்றும் குணப்படுத்துதலையும் கொண்டுவரவும் அவருடன் சேர்ந்து சரித்திரத்தின் போக்கை மாற்றவும் அவர் உனக்கு பெலன் தருகிறார்! நீ அதை நம்புகிறாயா?

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “சில மாதங்களுக்கு முன்பு, 15 வருடமாக நான் செய்துகொண்டிருந்த என்னுடைய வேலையை விட்டுவிடத் தயாராக இருந்தேன். கடினமாக உழைக்கவும், என் வேலையைப் பற்றி பெருமிதம் கொள்ளவும், நேர்மையாக இருக்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக நான் நானாக வாழவும் வேண்டும் என்று என் தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்தார். நான் ஒரு நல்ல விசுவாசியாக வாழ்ந்து வருகிறேன். ஆனால் நான் விசுவாசத்தை மறுதலிக்கும் ஒரு துறைக்குள் வேலை செய்து வருகிறேன். நான் அந்தக் குழுவில் இருக்க விரும்பவில்லை என்பதை எனது துணை ஆணையரிடம் விளக்கினேன். இருளில் பிரகாசிக்கும் ‘ஒளியாக’ இருக்கும்படி அவர் எனக்கு ஆலோசனை வழங்கினார். நான் முயற்சி செய்தேன், ஆனால் சீக்கிரத்திலேயே என் ஒளி மங்கத் தொடங்கியது, நான் தோல்வியுற்றதாக உணர ஆரம்பித்தேன். தினமும் நான் உங்களது செய்திகளை வாசித்து தியானிப்பதன் மூலம் வெளிச்சம் எனக்குள் திரும்ப வந்தது. நான் மீண்டும் தழைத்தோங்க ஆரம்பித்தேன். உங்கள் செய்திகள் என்னை ஆவிக்குரிய மரணத்துக்குத் தப்புவித்தன. மற்றவர்கள் தங்கள் கஷ்டங்களை என்னிடம் கூறும்போது உங்கள் செய்திகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். நீங்கள் எனக்காக இருப்பதற்கும் என் ஆவியை மீண்டும் உயிர்ப்பித்ததற்கும் நன்றி.” (அனிதா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!