உனது “(to-do list) செய்ய வேண்டியது – குறிப்புப் பட்டியலை” இயேசுவிடம் விட்டுவிடு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனது “(to-do list) செய்ய வேண்டியது – குறிப்புப் பட்டியலை” இயேசுவிடம் விட்டுவிடு!

நம்மில் பலருக்கு “”செய்ய வேண்டியவை என்ற தலைப்பில் குறிப்புப் பட்டியல்கள்” உள்ளன… அந்த நாள் முடிவதற்குள் நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் பிளானரில், ஸ்டிக்கி நோட்டில் அல்லது பழைய ரசீதின் பின்பக்கத்தில் எழுதிவைக்கிறோம்.

உதாரணமாக… மளிகைப் பொருட்களை வாங்குவது, குழந்தைகளைக் கால்பந்து பயிற்சிக்கு அழைத்துச் செல்வது, பல் மருத்துவரை சந்திக்கச் செல்வது போன்ற அனைத்தையும் நாம் எழுதிவைக்கிறோம். ஆனாலும், அது அத்தோடு முடிந்துவிடுவதில்லை என்பது உனக்கும் எனக்கும் தெரியும்! சில நேரங்களில் நம் நாட்கள் நாம் செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியல்களால் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இந்த நாளைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது…

“இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.” (வேதாகமத்தில் சங்கீதம் 118:24ஐப் பார்க்கவும்)

இந்த நாள் உனக்கு ஒரு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது! நீ எதைச் செய்யத் தீர்மானிக்கிறாயோ, அதைச் செய். இன்று உன் நடத்தைதான் உன்னை தேவ சமாதானத்தில் வாழ வைக்கும் அல்லது அதிலிருந்து உன்னைத் தூரமாக விலக்கிவிடும்.

இன்று நீ சந்திக்கும் கடைசி நிமிட மாற்றங்களை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள். உன் கண்களைக் கர்த்தர் மீதும், அவருடைய திட்டத்தின் மீதும் வைத்திரு. நீ நினைத்ததைப்போல் அது நடக்கவில்லை என்றாலும் கூட, நிச்சயம், அது உனக்கு மிகவும் சிறந்தாகவே இருக்கும்!

என்னுடன் சேர்ந்து ஜெபி: “ஆண்டவரே, இது நீர் உண்டுபண்ணிய நாள்; நான் இதில் மகிழ்ந்து களிகூருகிறேன். இன்றைய தினத்திலும் நாளைய தினத்திலும் நடக்கப்போகும் எல்லாவற்றிலும் நான் களிகூர விரும்புகிறேன். எனக்கு மிகச் சிறந்ததைத் தருவதே உமது விருப்பம் என்று நான் விசுவாசிக்கிறேன் மற்றும் அறிக்கையிடுகிறேன், மேலும் உம்மிடமிருந்து வரும் ‘தெய்வீகமான எதிர்பாராத’ மாற்றங்களை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!