உனது ஒளி பிரகாசிக்கட்டும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனது ஒளி பிரகாசிக்கட்டும்!

இயேசு உன்னைப் பற்றி உயர்வான ஓர் கருத்தைக் கொண்டுள்ளார். அவர் உன்னைக் குறைத்து மதிப்பிடுவதில்லை அல்லது உன்னை முக்கியத்துவமில்லாத‌ ஒரு நபராகக் கருதுவதில்லை. இல்லை… அவர் உன்னைப் பற்றி நினைப்பது முற்றிலும் மாறானது! இயேசு உன்னைப் பற்றி இவ்வாறு சொல்கிறார், “நீ உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறாய்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.’’ (மத்தேயு 5:14)

உன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நீ அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அவருடைய ஒளியைப் பிரகாசிப்பிக்கவும் நீ தகுதியான நபர் என்று இயேசு அறிவிக்கிறார்! நீ இருளில் பிரகாசிக்கிற ஒரு விளக்கைப்போல காணப்படுகிறாய்… (மத்தேயு 5:15)

இயேசு உன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். அதனால்தான் இந்தப் பணியை அவர் உன்னிடம் ஒப்படைக்கிறார்! நீதான் உலகத்தின் ஒளி. யாருக்கெல்லாம் கிறிஸ்து தேவையோ அவர்களைப் பிரகாசிப்பிக்கவும், அவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களை வழிநடத்தவும் உனக்குள் ஆற்றல் உண்டு.

உனக்குள் இருக்கும் அவரது ஒளி, நீ மற்றவரிடம் சென்று சாட்சிபகர உனக்கு பெலனளிக்கிறது என்பதை உறுதியாக நம்பு!

இதைத்தான் வேதாகமம் நமக்குத் தெளிவாகச் சொல்கிறது, “இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” (மத்தேயு 5:16)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!