உனக்கு ஓய்வு தேவைப்படுகிறதா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனக்கு ஓய்வு தேவைப்படுகிறதா?

ஓய்வு, ஓய்வு, ஓய்வு… ஆம், நிச்சயமாக நமக்கு இது தேவை, அப்படித்தானே?

ஓய்வு என்பது ஆண்டவர் தம்முடைய மக்களுக்குக் கொடுத்த முதல் கட்டளைகளில் ஒன்றாகும்… “ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக” (வேதாகமம், யாத்திராகமம் 20:8)

ஒரு கட்டளையாக கொடுக்கப்படுவதற்கு முன்பே, ஓய்வு என்பது சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாக இருந்தது… “தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.” (வேதாகமத்தில் ஆதியாகமம் 2:2-3ஐப் பார்க்கவும்)

எனவே, ஓய்வு என்பது உணர்ச்சி சம்பந்தப்பட்டதாக, மனம் சம்பந்தப்பட்டதாக அல்லது ஆவிக்குரிய விஷயத்தில் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் கூட, இது தெய்வீக திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.

வேலை செய்வதற்கென்றே பிரித்தெடுக்கப்பட்ட நாட்கள் இருப்பதுபோல, நமது ஓய்வுக்காகவும் ஒரு நாள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, நான் உன்னிடம் கேட்க விரும்புகிறேன், நீ போதுமான அளவு ஓய்வெடுக்கிறாயா? உன் சரீரத்திற்கு மட்டுமல்ல, உன் இருதயத்திற்கும் சற்று ஓய்வு கொடுக்க வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை உன்னால் ஒதுக்க முடிகிறதா?

  • உன் கவலைகளை சாந்தப்படுத்துவதற்கும், உன்னையும், மற்ற எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும் தேவன் மீது கவனம் செலுத்துவதற்கும் ஒரு நேரம் ஒதுக்குகிறாயா?
  • தேவனுடனும் உனக்குப் பிரியமானவர்களுடனும் உனது உறவை வலுப்படுத்துவதற்கான நேரத்தை ஒதுக்குகிறாயா?
  • அவரைத் துதிப்பதற்கும், எல்லாச் சூழ்நிலைகளுக்கும் மேலாக உன் விசுவாசத்தை அவர் மீது வைப்பதற்கும் உலகத்திலிருந்து உன்னைப் பிரித்துத் தனிமைப்படுத்தும்படி ஒரு நேரம் ஒதுக்குகிறாயா?

ஓய்வு எடுத்துக்கொள்வதன் மூலம் நாம் அனைவரும் சரியான இடத்திற்கும் ஒழுங்கிற்கும் திரும்பி வரும்படிக்கு, தேவன் நமது நன்மைக்காக ஓய்வை உருவாக்கினார்.

எனவே என் நண்பனே/தோழியே, இந்த வாரம், அவரிடத்தில் வந்து, அவர் தரும் ஓய்வை அனுபவிக்கத் தவறாதே!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!