உனக்கு ஒரு பரலோக பயிற்றுநர் இருக்கிறார்

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனக்கு ஒரு பரலோக பயிற்றுநர் இருக்கிறார்

என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். (சங்கீதம் 144:1)

நீ ஆண்டவடரின் “பயிற்சி மையத்தில்” இருக்கிறாய். இந்த நேரத்தில் நீ சந்தித்து கொண்டிருக்கும் அனைத்தும் உன்னை உருவாக்கவும் உனக்கு கற்பிக்கவும் விதிக்கப்பட்டது. உதாரணத்திற்கு, கற்றுத்தேர்ந்த விளையாட்டு வீரர்களைப் பாருங்கள். அவர்கள் அனைவரும் தீவிர பயிற்சியின் காலங்களைக் கடக்க வேண்டும்.

அத்தகைய காலகட்டத்தில் உன் உடல், உணர்ச்சி அல்லது மனதளவில் கடினமாக இருக்கலாம். உன் இருப்பின் ஒவ்வொரு பகுதியும் அழுத்தத்தில் இருப்பதாக உனக்குத் தோன்றலாம். நீ முற்றிலும் உடைந்துபோகப்போகிறாய் என்று நீ நினைக்கலாம் ஆனால் அது நடக்காது…

உன் தந்தை உன்னை எதிர்காலத்திற்காக தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். நீ என்ன செய்ய முடியும், எதைத் தாங்க முடியும் என்பதை அவர் அறிவார்.

உன் பார்வையை அவர் மீது பதித்து, தொடர்ந்து உன் வேலையை செய்து முன்னோக்கிச் செல். எந்த சூழ்நிலையிலும் இந்தக் கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்குத் தாவ வேண்டாம். ஒரு நல்ல பரலோக பயிற்றுநரைப் போல ஆண்டவர் உன் பக்கத்தில் இருக்கிறார். அவர் உன்னிடம் கூறுகிறார்… “என் பிள்ளையே, நீ நிச்சயம் சாதிப்பாய். உனக்கு உதவ நான் இங்கு இருக்கிறேன்.

என்னுடன் ஜெபிக்க நான் உன்னை அழைக்கிறேன்: “அப்பா, நான் என்ன செய்ய முடியும், என்னால் எதைத் தாங்க முடியும் என்பதை நீர் அறிதிருப்பதற்கு நன்றி. இதற்கெல்லாம் ஒரு நோக்கம் உண்டு… என் கைகளை போருக்கும், என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கு நீர் பயிற்றுவிக்கிறீர். நான் கப்பல் விட்டு கப்பல் தாவ மாட்டேன். நான் விடாமுயற்சியுடன் உம் குரலைக் கேட்பேன்! உம் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!